ஓலிவாங்கியால் எழுதும் என் கதை பாகம் 03
ஓவ்வொரு இனமும் தமக்கான அடையாளங்களை இழந்து விடக் கூடாது என்பதில் அதிக அக்கறை உடையவன் நான்.அந்த வகையில் எங்கள் நாட்டில் கிடைக்கும் குறுகிய வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் ஊடே தங்கள் கலை தாகத்தை தீர்க்க முயலும் நம்மவர்களுக்கு உரிய வாய்ப்புகளை நம் நாட்டு ஊடகங்கள் வழங்க வேண்டும் என்பது அன்றும் இன்றும் எனது எதிர்பார்பு. இந்தியாவில் உள்ள ஒரு மிகப்பெரும் நிறுவனம் மேற்கொள்ளும் முதலீட்டில் உருவாகும் திரைப் படத்தில் யாரோ எழுதி யரோ மெட்டமைத்து யாரோ பாடும் பாடலை நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு ஒலிபரப்பி இந்த பாடலை முதலில் தந்நதது நாங்களே என்ற வரிகளை இடைச்செருகி நாங்கள் போடும் கூத்துக்கள் அருவருப்பானவை இதனை நானும் விதிவிலக்கின்றி செய்திருக்கிறேன் என்பது கசப்பான உண்மை. இப்படியாக தென்னிந்திய திரைப்பட பாடல்களுக்கு நாங்கள் கொடுக்கும் அதி முக்கியத்துவத்தின் சிறு பகுதியை கூட எங்கள் நாட்டு கலைஞர்களுக்கு நாங்கள் வழங்க தவறி விடுகின்றோம்.எங்காவது ஒரிண்டு பேர் தமக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் மூலம் அணுகினால் ஏனோ தானோ என்று அவர்களின் பாடல்களை ஒலிபரப்பி அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதோடு எங்கள் கடமைகளை மு...
Comments