உலகம் 2008
உலகம் 2008
செனற்றர் ஓபாம என்று அறியப்பட்ட பராக் ஓபாமா அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.உலக அரங்கில் மாற்றஙகள் நிகழும் என எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள பராமவின் “ மாற்றம் “ “எங்களால் முடியும்” என்ற வார்தைகளின் உண்மையான அhத்தம் தேடி என்னைப் போல் பலரும் காத்திருக்கின்றார்கள் 2009 ஆம் ஆண்டின் வருககைக்காய்
இந்த ஆண்டின் கோரம் என அறிவிக்கப்பட்ட சீனாவின் பூமியதிர்ச்சி.மே மாதம் 12ம் திகதி தென் மேற்கு சீனாவில் ஏற்பட்ட பூமியதிர்வில் பலியானவர்களின் எண்ணிக்கை 55000 என்கின்றது சீன அரசு.தனது கணவனையும் மகளையும் தேடி கதறியளும் ஒரு பெண்ணின் சோகம். இது
ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும் என்பது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் கொள்கை.ஆப்கானிஸ்தானின் ஹெல்மன் மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிரந்த அமெரிக்க மரைன் படைச்சிப்பாய் தலீபான்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் கணப்பபொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றம். வசதியற்ற மக்களை மிக மோசமாக பாதித்தது இந்த ஆண்டில் தான்.உணவுக்காக பல நாடுகள் ஏனைய நாடுகளிடம் கையந்தும் நிலையும் ஏற்பட்டது.நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களையும் எதிரி நாடுகளுக்கு பயங்கரவாதத்தையும் ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானின் லாகூரின் ஒரு பாண் துண்டிற்காக போராடும் மக்கள்.
பல்வேறு தடைகளை தாண்டி பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது சீனா.1000 பதக்கங்களை வெல்வதற்கு 10000ற்கும் அதிகமான போட்டியாளர்கள் போட்டியிட்ட ஒலிம்பிக் 2008ல் பல சாதனைகள் படைக்கப்பட்டன.மைக்கல் பெல்பஸ் 8 தங்கங்களை வென்று படைத்த ஒலிம்பிக் சாதனை முறியடிக்கப்படுவதற்கு நீண்டகாலமாகலாம்.
ரஸ்ய ஆதரவு போராளிகளால் ஜோர்ஜியாவின் ஒசீசியா தனியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து ஒசீசியாவிற்கு நுழைந்த ஜோர்ஜி படைகளுக்கும் ரஸ்ய படைகளுக்கும் இடையில் கடுமையான மோதல் வெடித்தது.
சீனாவை மட்டுமன்றி இலங்கையின் பாலுற்பத்தி பொருட்களின் சந்தையை கூட உலுக்கியது மெலாமைன் விவகாரம்.சீனாவில் 4 குழந்தைகள் பலியாகி 50000 பேர் வரை பாதிக்கப்பட்டதை அடுத்து கிளம்பியது இந்தப் பூதம்.
உலக வல்லரசையே ஆட்டம் காண வைத்தது இந்த ஆண்டு ஏற்பட்ட பொரளாதார நெருக்கடி.பங்கு சந்தைகளின் வீழ்ச்சி,வட்டி வீதங்கள் குறைவு ,வேலை இழப்புகள் ,பெரிய நிறுவனங்களின் மூடுவிழாக்கள் என உலகை உலுக்கி பொருளாதார சுனாமி
யார் சொன்னது மேற்குலகம் நாகரீகத்தின் உச்சம் என்று.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமாவின் நேரடி போட்டியாளரும் அமெரிக்கா தேசியவாதிகளின் ஆதரவு பெற்றவருமான ஜோன் மக்கெய்னின் இந்த நடவடிக்கையை பார்த்தால் நிச்சயம் நாகரீகம் பற்றி வாய்கிளிய பெசும் வெள்ளையர்களுக்கு நல்ல பதில் வழங்கலாம்.
ஏத்தனை நாடுகள் குடை பிடிக்க நடத்து வந்த ராஜாவின் தலைக்கு குடைபிடிக்க இனி யார் வருவார் ..தன் கையே தனக்குதவியாக வெள்ளை மாளிகையில் இருந்து உலகை ஆண்ட புஸ் வெளியேறுகிறார் பராக் பராக் பராக்.
கொங்கோவில் இடம்பெற்று வரும் வன்மறைகள் காரணமாக சுமார் 250 000 பேர் தமது இருப்பிடங்களை விட்;டு வெளியேறியுள்ளனர்.மிக மோசமான மனித அவல நெருக்கடிகளுக்கு இவர்கள் முகம்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments