Posts

கூட்டு ஒப்பந்தம் - மலை முகடுகளில் மரித்துப் போகும் மனிதம்

Image
நேற்று ( 06-06-2011 ) பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தனமை குறித்த செய்திகள் ஊடகங்களின் பிரதான இடத்தை பிடித்திருந்தன. இனிவரும் இரண்டு வருடத்திற்கு அப்பாவித் தொழிலாளர்கள் வாய் திறக்க முடியாத படிக்கு ஒப்பந்த பத்திரங்களை தொழிற்சங்க எஜமானவர்கள் அவர்களின் வாய்களில் திணித்து விட்டனர். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தொழிலாளர்களை பிரதிநிதித்தவப்படுத்தும் குறிப்பிட்ட சில தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர். மூடிய அறைகளுக்குள் நடக்கும் இந்த ஒப்பந்த பேரத்தில் பேசப்படும் விடயங்கள் முழுமையாக அறியக்கிடைக்காது. இறுதியில் இத்தனை ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற ஒற்றை வரிச் செய்தி மட்டுமே வெளியாகும். இம்முறையும் ஆகக்குறைந்தது 500 ரூபா அடிப்படைச் சமபளம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வழமைபோல மலை உச்சிகளில் மலைச் சரிவுகளில் விழுந்து இறந்து போய்விட்டன. அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவில் இருந்து 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 380 ரூபா என்ற இலக்கை அடைந்துள்ளது அதாவது வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின்...

காலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்

Image
நெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது. உலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம். அவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச். வடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார். பொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர்...

ஒரு அழிவின் முடிவில் மறு அழிவின் ஆரம்பம்…

Image
யாழ்ப்பாணம் தமிழர்களின் கலாசாரத் தலைநகரம். மூன்று தசாப்த கால யுத்தத்தின் கோரங்களை இன்றும் சாட்சியங்களாகிக் கொண்டுள்ள நகரம். தனிப்பட்ட மற்றும் அலுவலகத் தேவைகள் கருதி யாழ் குடாவிற்கான நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் நான் வாழந்த சொந்த மண்ணில் இருந்து பிடுங்கி வீசப்பட்ட பின்னர் குறிப்பிடக் கூடிய வகையில் நீண்ட நாட்கள் அங்கு தரித்திருக்க கிடைத்த இந்த வாய்ப்பு இன்னும் சில காலத்திற்கு ஞாபகங்களை தாலாட்டும். பதினைந்து வருடங்களில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட வேண்டியவை. வீதிகள் தோறும் மரங்கள் வளர்க்கின்றார்களோ இல்லையோ மரங்களை தறித்து அடுக்கி காவல் அரண்களை அமைக்க தவறவில்லை. யுத்தம் முடிந்து விட்டதற்கான எந்த சுவடுகளும் இன்றி இன்னும் யுத்தம் பற்றிய கவலைகள் மிச்சமிருக்கின்ற ஒரு பிரதேசமாகவே குடாநாட காட்சி தருகின்றது. வீதிகள் தோறும் காவலிருக்கும் பச்சை உடைக்காரர்களை காணும் போது ஆத்திரத்திற்கு பதிலாக கவலை படத் தோன்றுகின்றது. அவர்களை தாண்டிப் போவதற்கும் அவர்களின் பிரசன்னங்களை இட்டு கவலைப்படாதிருக்கவும் ...

மீண்டும் அரங்கேறும் மகாபாரதக் காட்சிகள்…

Image
“ தேர்தல்” இன்று இலங்கையில் வாழும் அனேகமானோரின் உரையாடல்களில் பரவிக்கிடக்கும் சொல் இது .”நம்பிக்கையான மாற்றமும்” “வளமான எதிர் காலமும்” குறித்த கனவுகளோடு நீலமும் பச்சையும் போர்திய மனிதர்கள் காத்துக்கிடக்கின்றார்கள். ஆனால் இந்த தேர்தல் அரிதாரங்கள் பூசாமல் எங்கள் உறவுகள் சொந்த மண்ணின் வாழ்விற்கான ஏக்கங்களுக்குள் முகம் புதைத்து நிற்கின்றனர். கொடுத்து சிவந்து போன கரங்களை கொண்ட வன்னி மண்ணின் மைந்தர்கள் இன்று அடுத்தவர்களின் ஒத்தழைப்புக்களை எதிர் பாத்து ஏங்கும் வாழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் இன்னும் சொல்லப்பாட பல சங்கடங்களும் சொல்ல முடியாத சங்கதிகளும் இந்த மக்களை பற்றி நிறைந்து கிடைகின்றது. ஆனால் இவற்றையும் தாண்டி இன்று இவர்களிடமே இரந்து யாசகம் கேட்கின்றனர் அவர்கள். இந்த நிலை பாரதப் போரின் இறுதி தருணங்களை ஏனோ ஞாபாகிக்க வைத்து விடுகின்றது. யுத்த களத்தில் கர்ணனை தனது சாணக்கியத்தால் சரித்து விட்டு பின்பும் அவன் உயிர்காத்து நின்ற அவனின் தர்மத்தை தானமாக பெற்று அவனை கொன்ற கண்ணனை போல் தமிழ் மக்களின் வாக்குகளிற்காக கையேந்தி நிற்கின்றவர்களை பார்க்கத் தோன்றுகின்றது...

சூர்யோதயம் ..எண்ணங்களும் ஏக்கங்களும்

நட்சத்திர பதிவராக என்னை தெரிவு செய்த யாழ் தேவி குழுவினருக்கு முதலில் நன்றிகள். நேற்று இரவு யாழ் தேவிகட்கு உலவச் சென்ற போது தான் நான் நட்சத்திர பதிவரான விடயமே தெரியவந்தது. அதன் பின்னர் தான் மின்னஞ்சல் முகவரி தேடி திறந்த போது யாழ் தேவியினர் அனுப்பி வைத்த மின்னஞ்சல் காணக்கிடைத்தது. தினமும் ஏதாவது எழுத வேண்டும் என்ற அன்பு கட்டளை கூட அதன் பின்னர் தான் எனக்கு தெரியவந்தது அதனால் கடந்த இரு தினங்களாக நான் எதனையும் எழுதவில்லை பிழை பொறுத்தருள்க. சூரியோதயம்… (Sunshine) நண்பர் வியாசா கல்யாணசுந்தரம் கடந்த வருடம் ஆரம்பித்த ஒரு திட்டம் இது. கொழும்பில் வாழும் வசதி குறைந்த மாணவர்கள் சிலரை கல்விப் பொதுத் தராதர சாதரண தரப்பரீட்சைக்கு தயார் படுத்துவது தான் இந்த திட்டத்தின் முதல் படி. கடந்த வருடம் பல்வேறு சவால்களை தாண்டி அந்த திட்டம் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது. மிகவும் இலகுவான ஒரு திட்டம் இது வருமானம் குறைந்த குடும்பங்களில் இருந்து கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக கல்வியை வழங்குவதன் மூலம் அவர்களின் பெறுபேறுகள...

அரசியலாகும் விளையாட்டும் விளையாட்டாகும் அரசியலும்…

Image
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கான தேர்தல் ஆரம்பித்துள்ளது.இதில் வேடிக்கை பார்க்கும் மன நிலை தான் தமிழ் மக்களிடம் பெரிதும் மேலோங்கி நிற்கின்றது. எமது இனத்தின் அவலங்களுக்கு காரணமான தலைவரும் தளபதியும் மோதிக்கொள்ளும் களம் எங்களை பார்வையாளர்களாக ஆக்கியுள்ளது. ஆனாலும் இலங்கையில் பிறந்தவர்கள் என்ற படியால் தமிழர்களான எமக்கு கிடைத்துள்ள ஆகக் கூடுதலான ஜனநாயக உரிமையைான (???) வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் இல்லாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழர்களின் வாழ்வியல் மீதான இலங்கையின் ஆட்சியாளர்களின் அத்துமீறல்கள் எதிரெதிர் துருவங்களாகிப் போனவர்களிடம் இருந்து மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன. எல்லாம் நடந்து முடிந்த பின்பும் எல்லாம் தெரிந்த பின்பும் அவர்கள் சொல்லும் அல்லது சொல்லப் போகும் மெய்களின் மீது எங்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. ஆனால் உலகம் உண்மையை உணர இது ஒரு வாய்ப்பாக அமையும் என்ற குறைந்த பட்ச ஆசை தான் இங்கு வாழும் தமிழர்களிடம் பரவிக் கிடக்கின்றது. அரசியல் என்பது பல வினளயாட்டுகளின் கலவையாகிப் போய் கிடக்கின்றது. தடைகள் பல த...

இந்தியா எதிர் சீனா , இலங்கையில் அடுத்த இனிங்ஸ் ஆரம்பம்.

Image
உலகப் பொருளாதாரத்தில் இலாபகரமான வர்தகங்களில் ஆயுத வியாபாரமும் மருந்து பொருட்களும் முதன்மை வகிக்கின்றன. ஓன்று மனித இனத்தை அழிப்பதற்கும் மற்றையது மனித இனத்தை அழிவுகளில் இருந்து காப்பதற்குமான துறைகள் என்பது முரண்நகையானது. இரண்டு துறைகளினதும் தாக்கங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகம் இருப்பதை கடந்த காலங்கள் எமக்கு தெளிவு படுத்தி நிற்கின்றன. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நிலவும் போர்சூழலின் பின்னணியில் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிழல் கரங்கள் எப்போதும் இருந்து வருகின்றன. அதேபோலவே மருந்துப் பொருட்களின் உச்ச பாவனை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையே சார்ந்து இருக்கின்றது. இந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாற முடியாதபடிக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் காண்பித்து வரும் “அதீத அக்கறையின்” பின்னணியில் அவர்களின் ஆயுதங்களும் மருந்துகளும் மறைந்திருப்பது புரிதலுக்குரியது. ஆயுத வர்த்தக போட்டிகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் ஈடுபாடானது எந்த ஒரு நாட்டிலும் மோதலில் ஈடுபடும் இரு தரப்புகளுக்கான வெளி ஆதரவாக விரிவடையும். வெளிப்படையாக மோதல்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து ...