அரசியலாகும் விளையாட்டும் விளையாட்டாகும் அரசியலும்…

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கான தேர்தல் ஆரம்பித்துள்ளது.இதில் வேடிக்கை பார்க்கும் மன நிலை தான் தமிழ் மக்களிடம் பெரிதும் மேலோங்கி நிற்கின்றது.

எமது இனத்தின் அவலங்களுக்கு காரணமான தலைவரும் தளபதியும் மோதிக்கொள்ளும் களம் எங்களை பார்வையாளர்களாக ஆக்கியுள்ளது.

ஆனாலும் இலங்கையில் பிறந்தவர்கள் என்ற படியால் தமிழர்களான எமக்கு கிடைத்துள்ள ஆகக் கூடுதலான ஜனநாயக உரிமையைான (???) வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் இல்லாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தமிழர்களின் வாழ்வியல் மீதான இலங்கையின் ஆட்சியாளர்களின் அத்துமீறல்கள் எதிரெதிர் துருவங்களாகிப் போனவர்களிடம் இருந்து மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன.



எல்லாம் நடந்து முடிந்த பின்பும் எல்லாம் தெரிந்த பின்பும் அவர்கள் சொல்லும் அல்லது சொல்லப் போகும் மெய்களின் மீது எங்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை.

ஆனால் உலகம் உண்மையை உணர இது ஒரு வாய்ப்பாக அமையும் என்ற குறைந்த பட்ச ஆசை தான் இங்கு வாழும் தமிழர்களிடம் பரவிக் கிடக்கின்றது.

அரசியல் என்பது பல வினளயாட்டுகளின் கலவையாகிப் போய் கிடக்கின்றது.

தடைகள் பல தாண்டி வெற்றிக் கோட்டை நோக்கி ஓடும் ஒரு போட்டி தான் இது ஆனால் தடைகளை மட்டும் தாண்டாமல் போட்டியாய் ஓடி வரும் சக போட்டியாளரையும் போட்டு தள்ள வேண்டிய வேடிக்கை போட்டி தான் அரசியல்.

தங்கள் தடைகளை தாண்டி மற்றவர்களுக்கு தடைகளை ஏற்படுத்திய படி பேரட்டியாளர்கள் ஒடிக்கொண்டிருக்கின்றார்கள்

கமான் கமான சொல்ல சிவப்பு பச்சை நீலம் என நிறங்களை போர்திய அதரவாளர்கள் மைதானத்திற் வெளியில் தமது பந்தைய குதிரையின் வெற்றிக்காக காத்துக் கிடக்கின்றார்கள்

இவர்கள் எல்லோரையும் பார்து சோகம் அப்பிய முகங்களோடும் ஆறிப் போகாத காயங்களோடும் கம்பி வேலிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கின்றனர் தமிழர்கள்.

ஓடிக்கொண்டிருப்பவர்களின் வெற்றி பற்றிய அக்களை இவர்களுக்கு இல்லை ஆனால் தங்களை சுற்றி இருக்கும் முட்கம்பிகள் அகற்றப்படும் நாள் ஒன்று பற்றியதான கனவு தான் அவர்களிடம் இருக்கின்றது.

காணமல் போன தங்கள் உறவுகளின் வருகை எப்பொதேனும் நிகழக் கூடும் என்று அவர்கள் வாசலை பார்த்தபடி காத்திருக்கின்றார்கள்.

இவர்களுக்கு ஓட்டப்பந்தயம் மீதோ சுற்றி நின்று சத்தம் போடும் நிறம் போர்த்த மனிதர்கள் மீதோ அக்கறைகள் இல்லை.



00000000

திறந்த பொருளாதாரம் கொண்டு வந்த உலக மயமாதல் உன்பது உலகின் அத்தனை இயங்கியலையும் வியாபாரமாக்கி விட்டுள்ளது.

வீட்டில் உள்ள உறவுகளில் தொடங்கி நாடுகளில் வெளியுறவுக் கொள்கைகள் வரை எல்லாமே பணத்தால் மதிப்பிடப்படுகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

சிவப்பு நிற சட்டை போட்டு கம்யுனிச சித்தாந்தம் பேசிய தோழர்கள் கோட் சூட் அணிந்து கொண்டு பச்சை சட்டைகளோடு மேடையின் ஒன்றாக இருந்து கொண்டு பகிடி விடுகின்றார்கள் இது தான் உலகம் என்று தத்தவமும் பேசுகின்றார்கள்.

மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாத ஒன்று என்பது உண்மை தான் ஆனால் அந்த மாற்றங்களின் பின்னணியில் விளையாடும் டொலர்கள் தான் எத்தனை கோடி.

000000

கிரிகெட் என்ற மந்திரம் உலகில் எத்தனை கோடிப் பேரை கட்டிப் போட்டிருக்கின்றது. தங்கள் தாயர் தந்தையரின் பிறந்த நாளை கூட தெரிந்து வைத்திருக்காத சிறிசுகளுக்கு நேற்று வந்த விராத் கோலியின் காதலியின் பிறந்த நாளும் அதற்கு அவர் கொடுத்த பரிசும் கூட தெரிந்திருக்கின்றது ..இது தான் உலகம்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கும் கிரிக்கடெ்டிற்கும் இங்கே என்ன தொடர்பு என்று நீங்கள் சந்தேகிப்பது புரிகின்றது.

இது தான் அது.

இலங்கையருக்கு கிரிக்கெட்டின் உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த கிரிக்கெட்ட அணியின் தலைவா் அர்ஜன ரணதுங்க வெற்றிக் கிண்ணம் வரை இலங்கை அணியை தனது சகல துறை திறமையால் அழைத்து வந்தவர் சனத் ஜெயசூரியா.

இலங்கையருக்கு (???) இலங்கையை மீட்டு தந்ததாக கூறிக் கொள்பவர் மகிந்த ராஜபக்ச அதற்கு காரணமாக அமைந்த போரை வழிநடத்தியவர் ஜெனரல் பொன்சேகா.

சரத் பொன்சோகவிற்கு ஆதரவாக அர்ஜுன ரணதுங்கவும் மகிந்தவிற்கு ஆதரவாக சன் ஜெயசூரியாவும் களமிறங்கியிருக்கின்றார்கள்.

யார் வேண்டுமானாலும் இறங்கி வியளயாடக் கூடிய களத்தில் விளையாட்டு வீரர்கள் இறங்குவது தவறில்லை தானே.

ஆனாலும் இவா்கள் அரசியலில் ஈடுபடக் காரணமான அரசியல் தான் மோசமானது.

சனத் ஜெயசூரிய மிகவும் திறமையான ஒரு கிரிக்கெட்ட வீரர் என்பது உண்மை ஆனால் எந்த ஒரு திறமையான வீரரும் குறிப்பிட்ட காலம் மட்டுமே பிரகாசிக்க முடியும்

தனது அணியின் வெற்றிக்கு தன்னாலான பங்களிப்பை வழங்க முடியாத சந்தர்ப்பத்தில் ஒரு புதிய வீரருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது தான் மிகச் சிறந்த வீரனுக்கு அழகாக இருக்கும்.

அதை விடுத்து தான் தொடர்ந்துமம் இலங்கை அணியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபடுவது என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத விடயம் தானே.

சனத்தின் நிலைய தற்போது அது தான் 2011 உலகக் கிண்ணம் வரை தன்னை அணியில் தக்க வைப்பதற்காக அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவானவராக அடையாளப்படுத்தி வருகின்றார்.

சரத் பொன்சேகா தரப்பில் இலங்கைக்கு வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த அர்ஜன இடம்பெற்றுள்ளதால் அவருக்கு சவாலாக வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொடுக்க காரணமாக இருந்த சனத் ஜெயசூரியாவை மகிந்த தரப்பு களமிறக்கியுள்ளது.



00000000000000000

கிரிக்கெட் போட்களின் வெற்றி தோல்விகளை ஆடுகளங்களோ ஆடுபவர்களோ இப்போது தீர்மானிப்பதில்லை என்ற கருத்தில் நான் இப்போதும் மிகவும் உறுதியாகவே இருக்கின்றேன்.

தற்போதைய போட்டிகளும் போக்குகளும் அடிக்கடி எனது நிலைப்பாடு சரி என்றே சொல்லி நிற்கின்றன.

மிக அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இலங்கை அணி சவாலான இலக்கு ஒன்றை நோக்கி போராடி தோற்ற போட்டி பற்றியதான சுவாரசியமாக தகவல்கள் வெளிக்கசிந்துள்ளன.

டிசமபர் 15ம் திகதி இந்தியாவின் ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த சவாலான இலக்கான 414 என்ற ஒட்ட இலக்கை மிக வேகமாக நெருங்கி வந்த இலங்கை அணி இறுதி நேரத்தில் தோற்றுப் போனதன் பின்னணியில் இந்த அரசியல் இருப்பதாக பேசப்படுகின்றது.

போட்டி நிர்ணய சதியில் ஈடுபடும் தரப்பினால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் சூதாட்டக்காரர்களால் ஈட்டப்பட்ட பெருந்தொகை பணத்தில் சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் இந்திய அணி வெற்றி பெறாமல் போயிருந்தால் மிகப்பெருமளவு நிதி இழப்பு சூதாட்ட காரரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

00000000000000000000000000000000000

அரசியலாகிப்போன வியைாட்டும் விளையாட்டாகிப் போன அரசியலும் நல்ல முசுப்பாத்தி தான் பாருங்கோ நான் இப்ப போட்டு வாறன் இந்தியாவும் இலங்கையும் மோதும் இறுதிப் போட்டிய பார்க்கப் போறன்…பிறகு சந்திப்பம் என்ன..

இதை பதிவேற்றும் நேரம் இந்தியா 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் என்பது அந்த சூதாடிகளுக்கு கட்டயாம் நேற்றே தெரிந்திருக்கும் எங்களுக்கு தெரிவதற்கு இன்னும் சில மணி நேரம் தேவை

Comments

அண்ணா சத்தியமான கருத்து.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டி தொடர்பான தொலைக்காட்சி உரையாடலிலும் அரசியல் சார்ந்த விவாதங்களே இடம்பெற்றதை காணமுடிந்தது.
ஒவ்வொருவரும் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அருமையான பதிவு அண்ணா...

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...

மீண்டும் வாழ்வோம்….