இந்தியா எதிர் சீனா , இலங்கையில் அடுத்த இனிங்ஸ் ஆரம்பம்.

உலகப் பொருளாதாரத்தில் இலாபகரமான வர்தகங்களில் ஆயுத வியாபாரமும் மருந்து பொருட்களும் முதன்மை வகிக்கின்றன.

ஓன்று மனித இனத்தை அழிப்பதற்கும் மற்றையது மனித இனத்தை அழிவுகளில் இருந்து காப்பதற்குமான துறைகள் என்பது முரண்நகையானது.



இரண்டு துறைகளினதும் தாக்கங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகம் இருப்பதை கடந்த காலங்கள் எமக்கு தெளிவு படுத்தி நிற்கின்றன.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நிலவும் போர்சூழலின் பின்னணியில் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிழல் கரங்கள் எப்போதும் இருந்து வருகின்றன.

அதேபோலவே மருந்துப் பொருட்களின் உச்ச பாவனை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையே சார்ந்து இருக்கின்றது.

இந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாற முடியாதபடிக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் காண்பித்து வரும் “அதீத அக்கறையின்” பின்னணியில் அவர்களின் ஆயுதங்களும் மருந்துகளும் மறைந்திருப்பது புரிதலுக்குரியது.

ஆயுத வர்த்தக போட்டிகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் ஈடுபாடானது எந்த ஒரு நாட்டிலும் மோதலில் ஈடுபடும் இரு தரப்புகளுக்கான வெளி ஆதரவாக விரிவடையும்.
வெளிப்படையாக மோதல்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலைப்படும் நாடுகள் மறை முகமாக தமது வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கும்.

இதுவரை ஆயுத வியாபார நாடுகளின் ஆதார சுருதிகளில் ஒன்றாக விளங்கிய இலங்கையில் நீண்ட கால யுத்தம் எதிர்பாராத விதமாக முடிவிற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இலங்கையை முன்னிலைப்படுத்திய மருந்து வியாபார போட்டி ஆரம்பித்துள்ளது.

ஆசியாவின் நாளைய வல்லரசுக்கான ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இந்தியாவும் சீனாவும் மருந்து பொருட்களின் விற்பனை சந்தைக்கான போட்டிக் களமாக தற்போது இலங்கையை தெரிவு செய்துள்ளமை வியப்பான உண்மை.

இதனை விரிவாக ஆராய்வதற்கு முன்பாக சீனாவின் உற்பத்தி கொள்ளகை குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.

சீனாவிடம் தேவைக்கதிகமாக மனித வளம் நிறைந்து கிடக்கின்றது இயற்கை வளத்திற்கும் குறைவில்லாத நாடு.

மேற்குலக நாடுகள் பெருமளவு பணத்தை வாரியிறைந்து கண்டு பிடிக்கும் எந்த ஒரு சாதனத்தையும் மிக இலகுவாக பிரதி பண்ணும் ஆற்றல் சீனாவிடம் உண்டு.
உலக சந்தையில் குறைந்த விலைக்கு சீனாவின் உற்பத்தி பொருட்கள் கிடைக்கின்றன.
ஏந்த விதிவிலக்கும் இல்லாமல் மின்மவியல், மின்னியல், பொருட்களை சீனா உற்பத்தி செய்து வருகின்றது.

மேற்கத்தையே நாகரீக மோகத்தில் சிக்கியிருக்கும் வறுமை சூழ்ந்த மக்களுக்கு சீனாவின் உற்பத்திகள் வரப்பிரசாதமானவை.

உதாரணமாக நொக்கியாவின் பிந்திய தயாரிப்புகளின் சந்தைப் பெறுமதி 50,000 ற்கும் அதிகமாக இருக்கும் போது அதே போன்ற சீனாவில் தயாரான செல்லிடப் பேசியை 10,000ற்கு இலங்கை சந்தையில் பெற முடிவதை நோக்கலாம்.




நோக்கியாவின் வடிவத்தில் அதே பெயரில் உருவாக்கப்படும் அந்த தொலைபேசி தொடர்பில் உரிமையாளர் மட்;டுமே உண்மை தெரிந்தவராகின்றார்.

இது போன்ற ஏராளமான சீன பிரதிகள் உலகம் முழுவதும் நிநை;து கிடக்கின்றன.
இவை ஆபத்தற்றவை மலிவான விலையில் கிடைப்பதால் அவற்றின் பாவனைக்காலம் குறித்தும் நுகர்வோhர் அதிகம் அக்கறை கொள்ளமாட்டார்கள் அல்லது முன் கூட்டியே அதற்கான தயார் படுத்தல்களுடனேயே கொள்வனவும் செய்திருப்பார்கள்.
ஆனால் சீனா இப்போது கைவைத்துள்ள துறை மனித குலத்திற்கே பேராபத்தை ஏற்படுத்தி விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆம் சீனா இப்போது போலி மருந்துகளை தயாரித்து விற்பதில் முனைப்பு காட்டி வருகின்றது.
சீனாவில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களின் இந்த நடவடிக்கை உலக நாடுகளில் பலத்த கவனிப்பை பெற்றுள்ளது.



இது ஒரு புறம் வருமாளமீட்டலுக்கான குறுக்கு வளியாக நோக்கப்பட்டாலும் மறை முகமாக இந்தியாவின் அதீத வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கான சீனாவின் மூலோபாயமாக நோக்கப்படுகின்றது.

இந்தியாவில் துரத வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் ஒன்றாக மருந்து பொருட்களின் உற்பத்தி துறை மாறியுள்ளது.

இந்தியாவின் மருந்து பொருட்களின் உற்பத்தித் துறையானது 4.5 பில்லியன் டொலர் பெறுமதியுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மருந்துகளுக்கு வெளிநாட்ட சந்தைகளில் கிடைத்து வரும் நன்மதிப்பு இந்த துறையை துரித வளர்ச்சி நிலையில் வைத்திருக்கின்றது.

வருடாந்தம் இந்த துறையானது 8 முதல் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆயிரம் கோடிகளை அந்நிய செலவாணியாக ஈட்டித் தரும் இந்த துறை தான் சீனாவின் இலக்கு.

இந்தியாவில் தயாராகும் மருந்துகளைப் போலவே தயாரிக்கப்பட்டு இந்தியாவில் தயரானவை என்ற பட்டியுடன் நைஜீரியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகளின் தரம் குறித்து எழுந்த சர்சைகள் சீனாவின் சதியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மருந்து பொருட்களில் 15 வீதமானவை ஆபிரிக்க நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன இதன் மூலம் சுமார் 30,000 கோடி ரூபா வரமானம் இந்தியாவிற்கு கிடைத்து வருகின்றது.

நைஜீரியாவிற்கு இந்தியாவின் பெயரில் சீனா அனுப்பி வைத்த போலி மருந்துகள் இந்திய மருந்து உற்பத்திகள் தொடர்பான நம்பகத்தன்மையை குலைத்து விட்டன.

எனினும் இந்திய புலனாய்வு துறையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் சீனாவின் சதி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சதி குறித்து நைஜீரிய மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்த போலி மருந்துகள் கண்டு பிடிக்கப்படாமல் விநியோகிக்கப்பட்டிருந்தால் சுமார் ஏழு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நைஜீரியா அறிவித்துள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் தனது முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத சீனா இந்தியாவில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்குள் தளது ஊடுருவலை மேற்கொண்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய மருந்த சந்தையில் பாவனையில் உள்ள மருந்துகளில் 15 முதல் 20 வீதமானவை போலியானவையாக மாறிப்போயுள்ளன.



ஆபிரிக்கா , ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பாவனையில் உள்ள மருந்த பொருட்களில் 30 வீதமானவை போலியானவை என்றும் அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரானவை என்ற அடையாளமிடப்பட்டவை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவின் மருந்து உற்பத்தி துறையில் மிகப் பெரும் பாதிப்பi ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலும் அண்மை நாட்களில் இந்திய மருந்துப் பொருட்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்சைகளால் இந்தியாவின் சில முக்கிய நிறுவனங்களில் இருந்த மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கi அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் 6 முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளுக்கு இலங்கையில் இரண்டு வருடங்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் தடை செய்யப்பட்ட 6 நிறுவனங்களிலும் ஒன்றும் அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படுவதுமான பக்ஸ்ரர் இந்தியா நிறுவனத்திற்கு மட்டும் இந்த தடையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக்களித்துள்ளமை குறித்து இந்திய மருந்து பொருட்களின் உற்பத்தியாளர்கள் சங்கங்கம்; விசனம் வெளியிட்டுள்ளது.



இந்த தடையை ஏற்படுத்துவதன் பின்னணியில் இலங்கையில் உள்ள சீன சார்பு அரசியல் கட்சியும் அதன் தொழிற்சங்கங்களும் செயல்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மையம் கொண்ட ஆயுத விற்பனைகள் முடிவிற்கு வந்துள்ள நிலையில் இந்தியாவும் சீனாவும் மருந்து பொருட்களின் விற்பனைக்கான போட்டிக் களமாக இலங்கையை தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

maruthamooran said…
போலிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்தும் உலகுக்கு வழங்கி வருவதில் சீனா முன்நிற்கிறது.

பால்மா, தொழிநுட்ப கருவிகள், மருந்துகள், உணவு வகைகள், சிறுவர் விளையாட்டு பொருட்கள் என்று அனைத்திலும் தரநிர்ணயம் செய்யாமல் உலகம் பூராகவும் போலிகளை வர்த்தகம் செய்வதை சீனா தொடர்கிறது.

இதற்கான கண்டனங்களும், தடைகளும் நீடித்தலும் சீனா அதை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்தும் தரம் குறைந்த பொருட்களை விநியோகித்து வருகின்றமை எச்சரிக்கையுடன் நம்மை அணுக வைக்கின்றன.

இலங்கையிலும் பத்து வருடங்களுக்கு முன்னரிலிருந்து சீனாவின் தரமற்ற பொருட்களை அதிகளவில் காண முடிகிறது. இது எங்கு கொண்டு சென்று விடுமோ தெரியவில்லை?
உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி !
வாழ்த்துக்கள் !!!


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
Unknown said…
நன்றி மருதமூரான்
உங்கள் எண்ணப் பகிர்விற்கு
Unknown said…
சங்கர் உங்கள் நம்பிக்கைக்கும் வருகைக்கும் நன்றி

Popular posts from this blog

யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்... !

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...