மீண்டும் அரங்கேறும் மகாபாரதக் காட்சிகள்…

“ தேர்தல்” இன்று இலங்கையில் வாழும் அனேகமானோரின் உரையாடல்களில் பரவிக்கிடக்கும் சொல் இது.”நம்பிக்கையான மாற்றமும்” “வளமான எதிர் காலமும்” குறித்த கனவுகளோடு நீலமும் பச்சையும் போர்திய மனிதர்கள் காத்துக்கிடக்கின்றார்கள்.

ஆனால் இந்த தேர்தல் அரிதாரங்கள் பூசாமல் எங்கள் உறவுகள் சொந்த மண்ணின் வாழ்விற்கான ஏக்கங்களுக்குள் முகம் புதைத்து நிற்கின்றனர்.

கொடுத்து சிவந்து போன கரங்களை கொண்ட வன்னி மண்ணின் மைந்தர்கள் இன்று அடுத்தவர்களின் ஒத்தழைப்புக்களை எதிர் பாத்து ஏங்கும் வாழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்னும் இன்னும் சொல்லப்பாட பல சங்கடங்களும் சொல்ல முடியாத சங்கதிகளும் இந்த மக்களை பற்றி நிறைந்து கிடைகின்றது.

ஆனால் இவற்றையும் தாண்டி இன்று இவர்களிடமே இரந்து யாசகம் கேட்கின்றனர் அவர்கள்.

இந்த நிலை பாரதப் போரின் இறுதி தருணங்களை ஏனோ ஞாபாகிக்க வைத்து விடுகின்றது.

யுத்த களத்தில் கர்ணனை தனது சாணக்கியத்தால் சரித்து விட்டு பின்பும் அவன் உயிர்காத்து நின்ற அவனின் தர்மத்தை தானமாக பெற்று அவனை கொன்ற கண்ணனை போல் தமிழ் மக்களின் வாக்குகளிற்காக கையேந்தி நிற்கின்றவர்களை பார்க்கத் தோன்றுகின்றது.

யுத்த களத்தில் நகர்த்தப்பட்ட காய்களால் குண்டு பட்டு சரிந்த கிடக்கின்ற தமிழினம் என்கின்ற கர்ணனிடம் தங்கள் வெற்றிக்கா இப்போது வாக்குகளை தானமாக நிற்கின்றார்கள் அவர்கள்.

ஓரே மாற்றம் கண்ணன் மட்டுமல்ல அர்ஜுனனும் கூடவே தானம் கேட்டு வந்துள்ளாளன்.

கர்ணன் புதைந்து போன தே்ாக்காலை அசைக்கப் முற்பட்ட போது அவன் மீது அம்பு வீசி கொல்லச் சொன்ன கண்ணனுக்கு தங்கள் தர்மத்தை எல்லாம் தானமாக கொடுப்பதா அல்லது அம்பு வீசி சரித்த அர்ஜுனனுக்கு தானமளிப்பதாக என்று குழப்பிப் போய் கிடக்கின்றான் கர்ணன் இல்லை இல்லை தமிழன்.

தான் சொன்னதை கர்ணன் கேட்கத்தவறியதால் அவனை தவிக்க விட்டு போன சல்லிய மன்னனும் கர்ணனின் வீழ்ச்சியில் பங்கு கொண்டவர்கள் என்பதும் இங்கே ஞாபகத்திற்கு வருகின்றது.

தானம் கேட்டு வந்தவர்கள் தவித்த வாய்களுக்கு தண்ணீராவது தரக் கூடாத என்ற ஏக்கங்களோடு சரிந்து கிடக்கின்றான் தமிழன்.



தமிழ் பேசும் சிறுபான்மைச் சமூகங்கள் இன்று என்றுமில்லாத முக்கியத்துவத்தை பெற்று நிற்கின்றார்கள்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யாராக இருந்தாலும் அவர் சிறுபான்மை மக்களால் தெரிவு செய்யப்படுபவராகவே இருக்கப் போகின்றார்

நீலமும் பச்சையும் சிங்கள மக்களின் வாக்குகளை சரி சமமாக பங்கு போட்டு கொண்டுள்ளன.

இப்போது மிஞ்சியிருப்பது அப்பாவி சிறுபான்மையினரின் வாக்குகள் அவர்கள் யாருக்கு புள்ளடி போடுகின்றார்கயோ அந்த புள்ளடி ராஜா தான் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி.

இலங்கையின் தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாலாங்கொடை ஆகிய இரு மாவட்டங்களும் அருகருகானவை.

இந்த இரு மாவட்டங்களினதும் புதல்வர்கள் தான் ஜனாதிபதித் தேர்தலில் நேருக்க நேர் பொருதி நிற்கின்றார்கள்.

அதனால் முன்னைய தேர்தல்களை போல மேட்டுக் குடி சிங்களவர்களுக்கும் தென் பகுதி சிங்களவர்களுக்குமான தேர்தலாக இது இருக்காது.

தென் பகுதியின் சிங்கங்கள் இரண்டுக்கு இடையிலான புதிய களமாகவே இந்த தேர்தல் நோக்கப்படுகின்றது.

யுத்த வெற்றியை பங்கு போடுவதும் அதை சிங்கள மக்கள் மத்தியில் சிறப்பான முறையில் விற்பனை செய்வதும் தான் இவர்கள் முன்னுள்ள முக்கிய சவால்

யார் சிறந்த வியாபாரி என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தப் போகின்றன விற்பனை பொருளாகிப் போன நாங்கள் என்ன தான் செய்வது.

கீரைக்கடைக்கே எதிர் கடை வேண்டும் போது அரசியலில் இரு சம பலமிக்க வேட்பாளர்கள் போட்டியி்ட வேண்டியது தவிர்க்கப்பட முடியாதது தானே.

என்ன ஒரு கடையில் ஒன்றாக இருந்து வியாபாரம் செய்த இருவரில் ஒருவர் கணக்கு வழக்கு பிரச்சினைகளால் பிரிந்து சென்று புதிய கடை தொடங்கும் வாடிக்கையின் நீட்சி தானே இது.

என்ன இரண்டு கடைகள் வந்ததால் ஒரே குட்டையாய் சி…சிஈ கடையாய் இருந்த போது செய்த தில்லு முல்லுகள் எல்லாம் இப்போது வெளிச்சத்திற்கு வருகின்றன.


மக்கள் மத்தியில் சிறந்தவற்றை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு குறைந்து மோசமானவா்களிலயே கொஞ்சம் நல்ல மோசமானவர்களை தெரிவு செய்யும் தேவை ஏற்பட்டுள்ளது.

ஒருவரின் குடும்ப ஆட்சி பற்றி அதிகம் பேசும் மற்றவரின் குடும்பம் கூட அவர் வென்றால் ஆட்சி பீடம் ஏறும் என்கின்றன மறுதரப்பு.

இவர்களில் எவர் வென்றார் என்ற செய்தியை சொல்வதற்கு கூட ஊடகங்களுக்கு தடை போடப்பட்டிருக்கின்றது.

என்றுமில்லாதவாறு வன்முறைகள் அதிகரிக்கும் என்று எல்லோரும் அச்சத்தில் உறைந்து கிடக்கின்றனர்.

தேர்தல் முடிவுகளை விடவும் வன்முறைகளின் தீவிரம் குறித்தே அதிகம் பேர் அக்கறைப் படுகின்றனர்.

நம்பிக்கையான மாற்றமோ …? வளமான எதிர்காலமோ …? எல்லாமே (வெறும்) வார்தைகள் தானே என்கின்றான் எனக்குள் இருக்கும் அகதித் தமிழன் அவன் சொல்வதும் சொல்லாதததும் உண்மைதானே..

Comments

Sanjeeban said…
''நம்பிக்கையான மாற்றமோ …? வளமான எதிர்காலமோ …? எல்லாமே (வெறும்) வார்தைகள் தானே என்கின்றான் எனக்குள் இருக்கும் அகதித் தமிழன் அவன் சொல்வதும் சொல்லாதததும் உண்மைதானே."""

Anna, unamaiyana Tamilanin Valigal than Ivai..
Unarthiyamaikku Nantrikal

Sanjeeban.Canada.!

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...

மீண்டும் வாழ்வோம்….