நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...!

கனடாவின் முன்னாள் நீதி அமைச்சராக இருந்த Jody Wilson-Raybould இன் பதவி விலகல் கனடாவில் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

SNC-Lavalin என்ற பெரு நிறுவனம் தொடர்பில் எழுந்துள்ள சர்சைகளே இந்த பதவி விலகலுக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

எரிசக்தி, மின் உற்பத்தி, அணு சக்தி. கட்டுமானம் ,பொறியியல் என பல துறைகளில் தடம் பதித்துள்ள இந்த நிறுவனம் பல நாடுகளில் மிகப் பெரும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 2017ம் ஆண்டு 9.3 பில்லியன் டொலர்கள் வருமானத்தை பெற்றுக் கொண்ட கனடாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் SNC-Lavalin ன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து அந்த நிறுவனத்தை பாதுகாப்பதற்கு லிபரல் அரசாங்கத்தின் முக்கிய தரப்புகள் முற்பட்டதாகவும் அதற்கு  முன்னாள் நீதி அமைச்சராக விளங்கிய இருந்த Jody Wilson-Raybould இணங்கவில்லை என்பதால் அவருடைய நீதி அமைச்சு பதவியினை அவர் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

1911 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 50,000 ற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். கனடாவின் கியுபெக்கை தலைமையகமாக கொண்ட இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளிலும் தனது தொழில் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. கனேடிய அரசாங்கத்தின் பல திட்டங்களையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



2017 Financial highlights of SNC-Lavalin


லிபியாவில் ஒப்பந்தங்களை பெற்றுக் கொள்வதற்காக SNC-Lavalin நிறுவனம் இலஞ்சம் வழங்கியமை குறித்தும் வேறு சில மோசடிகள் குறித்தும் அந்த நிறுவனத்தின் மீது குற்றவியல் (Criminal) குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2001 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லிபியாவில் இந்த நிறுவனம் சுமார் 48 மில்லியன் டொலர் பெறுமதியான இலஞ்சத்தை லிபிய அதிகாரிகளுக்கு வழங்கியதாகவும் சுமார் 130 மில்லியன் டொலர் பெறுமதியான மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இந்த நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பத்து வருடங்களுக்கு அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் தற்போது ஆரம்ப நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

2015ம் ஆண்டு லிபரல் அரசாங்கம் பதவிக்கு வந்ததை அடுத்து  Deferred Prosecution Agreements  எனப்படும் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு ஒப்பந்தங்கள் குறித்த மாற்றங்களை ஏற்படுத்துமாறு கனேடிய அரசாங்கத்திற்கு இந்த நிறுவனம் மறைமுகமான அழுத்தங்களை வழங்கியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவின் குற்றவியல் கோவைகளில் (Criminal Codes) இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் லிபரல் அரசாங்கத்தை நகர்த்துவதற்காக பரப்புரை (Lobbying) செயல்திட்டத்தையும் இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளது.

Deferred Prosecution Agreements மூலமாக அது தனது குற்றங்களுக்கான தண்டனைப் பணத்தை மட்டும் செலுத்தி விட்டு அரசாங்க ஒப்பந்தங்களுக்கான நீண்ட காலத் தடையில் இருந்து தப்பிப்பதற்கு முனைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SNC-Lavalin நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நெகிழ்வுப் போக்கினை காண்பிக்குமாறும் அந்த நிறுவனத்தை சட்டச் சிக்ல்களில் இருந்து விலக்களிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதி அமைச்சராக இருந்த Jody Wilson-Raybould  பிரதமர் அலுவலகம் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்ததாக Globe and Mail செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த அழுத்தங்களுக்கு பணிய மறுத்தமை காரணமாகவே அவரின் நீதி அமைச்சு பதவியை அவர் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டாதகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியானதை அடுத்தே Jody Wilson-Raybould தனது அமைச்சு பதவியில் இருந்த விலகுவதான அறிவித்தலை வெளியிட்டார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை பிரதமர் Justin Trudeau மறுத்திருந்தார்.

இந்த வருட ஆரம்பத்தில் Scott Brison தனது அமைச்சு பதவியில் இருந்து விலகியதை அடுத்து நீதி அமைச்சராக இருந்த Jody Wilson-Raybould அமைச்சரை படை வீரர்கள் நலன்களுக்கான விவகாரங்களை கையாளும் அமைச்சராக பிரதமர் Justin Trudeau நியமித்தார். 

நீதி அமைச்சு என்ற மிக முக்கிய அமைச்சராக இருந்த Jody Wilson-Raybould  முக்கியத்துவம் குறைந்த ஒரு அமைச்சு பதவிக்கு நியமிக்கப்பட்டமை பல்வேறு கேள்விகைளை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது அவரின் பதவி விலகல் அதற்கான நியாயப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் திகதி தற்போதைய உட்கட்டுமான அமைச்சர் Francois-Philippe Champagne அவர்களை SNC-Lavalin நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு நடைபெற்ற காலப்பகுதியில் Francois-Philippe Champagne  அவர்கள் நிதி அமைச்சர் Bill Morneau வின் பாராளுமன்ற செயலாளராக விளங்கினார் என்பத குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பினை தொடர்ந்து பிரதமர் அலுவகத்தின் முக்கிய அதிகாரியாகவும் பிரதமரின் ஆலோசகராகவும் விளங்கிய Cyrus Reporter  என்பவரும் இணைந்து  SNC-Lavalin நிறுவன அதிகாரிகள் கனடாவின் நீதித்துறையின் முக்கிய பிரமுகர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 18 தடவைகள் இந்த சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது சட்ட மாற்றங்களை உருவாக்குவதன் மூலம் தம்மை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அவர்கள் கலந்தரையாடியதாகவும் கூறப்படுகின்றது.

கனெடிய நிதி அமைச்சர் Morneau வின் சிரேஸ்ட கொள்கை அலோசகர் Robert Asselin அவர்களுடனும் அதன் பின்னர் பிரதமரின் கியுபெக் விகாரங்களுக்கான கொள்கை ஆலோசகர் Mathieu Bouchard உடனும் இவர்கள் சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

இதேவேளை கனடாவின் சர்வதேச விவகாரம் மற்றும் புத்தாக்த்தறை அதிகாரிகளுடனும் புத்தாக்கத்தறை அமைச்சர் Navdeep Bains உடனும் இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியுடன் தொடர்படைய அமைச்சுகள் அகிவற்றை நோக்கியதாக இருந்த  SNC-Lavalin  நிறுவனத்தின் பரப்புரை செயல் திட்டம் பின்னர் ஏனைய துறைகளை நோக்கியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

2016 ம் ஆண்டு ஏற்றுமதி அபிவிருத்தி, பொதுமக்கள் பாதுகாப்பு, பொது்ச சேவைகள் மற்றும் கொள்முதல் பிரிவு போன்றவற்றையும் இவர்கள் அணுகியதாக தெரியவந்துள்ளது.

2017ம் ஆண்டளவில் திறைசேரி, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச் கூழல் துறை ஆகியவற்றையும் இவர்கள் அணுகி தமது பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர்.

20 மாதங்களில் 51 முக்கிய சந்திப்புகளை அந்த நிறுவனம் லிபரல் அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினருடனம் நடத்தியுள்ளமை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக கடந்த வருடம் நிதி அமைச்சர் சமர்பித்த வரவு செலவுத் திட்ட அமுலாக்கம் குறித்த சட்ட மூலத்தில் Deferred Prosecution Agreements (DPA)  எனப்படும் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு ஒப்பந்தங்கள் குறித்த திருத்தங்களுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஒரு சட்டத் திருத்தமாக கருதப்பட வேண்டிய விடயம் எவ்வாறு வரவு செலவுத் திட்டத்திற்கான சட்ட மூலத்தில்  உள்ளடக்கப்பட்டது என்ற கேள்விகள்  எதிர் கட்சிகளால் எழுப்பப்பட்டன.

இந்த சட்டத் திருத்தமானது ஊழல் மோசடிகள் குறித்த குற்றவியல் குற்றச்சாட்டுக்ளை எதிர் கொண்டுள்ள White Collar Criminals மீதான நடவடிக்கைகளை இல்லாமல் செயவதாகவும் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கொன்சவேற்றிவ் கட்சியின் Pierre Polievre குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் Moneau தமது அணுகுமுறை வேறு பொருளாதாரங்களில் அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளதாகவும் சமூகத்திற்கு செலுத்த வேண்டிய பங்கினை அவர்கள் செலுத்திய பின்னர் தமது செயல்பாடுகளை அவர்கள் முன்னெடுப்பதற்கு வாய்பினை வழங்கும் என்றும் கூறினார்.

இந்த விடயத்தில் எதிர் கட்சிகளின் கடுமையான அழுத்தங்கள் அதிகரிப்பதை உணர்ந்து கொண்ட SNC Lavalin நிறுவனம் Conservative கட்சி தலைவர் Andrew Scheerஅலுவலத்தையும் புதிய ஜனநாயகக் கட்சிய் தலைவர் Jagmeet Singh அலுவலகத்துடனும் பேச்சுவார்தை நடத்தியுள்ளது.

அத்துடன் செனட் சபையில் அரசாங்கப் பிரதிநிதியாக விளங்கும் Peter Harder உட்பட முக்கியமான செனட் சபை உறுப்பினர்களையும் சந்தித்த பேசியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சந்திப்புகள் அனைத்தும் ” நீதி மற்றும் சட்ட அமுலாக்கல்  தொடர்பான உரையாடல்களாகவே பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஜீன் மாதம் 21ம் திகதி வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்சியாக மூலமாக SNC Lavalin நிறுவனம் எதிர்பார்த்த Deferred Prosecution Agreements (DPA)  எனப்படும் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு ஒப்பந்தங்கள் குறித்த திருத்தங்களும் அமுல்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. SNC Lavalin  இதுவரை மேற்கொண்ட கடும் முயற்சிகளுக்கான முதலாவது பலனை பெற்றுக் கொண்டது.

எனினும் இந்த Deferred Prosecution Agreements (DPA)  எனப்படும் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு ஒப்பந்தங்கள் குறித்த சட்ட ஏற்பாடுகளை பயன்படுத்தி SNC Lavalin  நிறுவனம் தனக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட சிலவாரங்களின் பின்னர் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அலோகர்களான Bouchard மற்றும் Elder Marques ஆகியோரை SNC-Lavalin நிறுவனத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

2016ம் ஆண்ட முதல் SNC-Lavalin நிறுவனம் நடத்திய 80 சந்திப்புகளில் ஒரு தடவை கூட நீதி அமைச்சருடனான சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை அத்துடன் சட்ட திணைக்களத்துடனும் SNC-Lavalin நிறுவனம் பேச்சுவார்தைகளை நடத்தியிருக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் 17ம் திகதி பிரதமர் Trudeau அவர்கள் நீதி அமைச்சராக இருந்த Wilson-Raybould. அவர்களை சந்தித்து பேசியுள்ளார். எனினும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக Deferred Prosecution Agreements (DPA)  கொண்ட வரப்பட்டமை குறித்தும் அதன் பின்னணி குறித்தும் நீதி அமைச்சர் Wilson-Raybould  தெளிவு பெற்றிருந்தாக கூறப்படுகின்றது.

நீதி அமைச்சுருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தில் அவர் தன்னிச்சையாக செயல்பட முடியும் என்றும் பொது வழக்குகள் திணைக்களத்தின் செயல்பாடுகளில் அவர் சுயாதீனமாக செயல்பட முடியும் என்றே தான் நீதி அமைச்சர் Wilson-Raybould  வுக்கு கூறியதாகவும் பிரதமர் Trudeau தெரிவித்து வருகின்றார்.

எனினும் நீதி அமைச்சராக இருந்த Wilson-Raybould  ஐ பதவி நீக்கி அவருக்கு குறைாவன அமைச்சரவை அந்தஸ்துள்ள படை வீரர்களின் நலன் பேணும் அமைச்சை பிரதமர் Trudeau வழங்கினார் என்பதே பல்வேறு சந்தெகங்கள் எழுவதற்கு காரணமாகின்றது.

பிரதமருக்கும் நீதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் SNC-Lavalin மீண்டும் தனத பரப்புரைகளை ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சர் Bill Morneau மற்றும் சிலரை இவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்புகளும் முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.

கடந்த ஒக்ரோபர் மாதம் Deferred Prosecution Agreements (DPA)  எனப்படும் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு ஒப்பந்தங்கள் மூலமான விதிவிலக்கினை SNC Lavalin's நிறுவனத்திற்கு வழங்க முடியாத என்ற அரசாங்க சட்டத்தரணிகள் அறிவித்தனர்.

இந்த நிறுவனத்தின் மீதான குற்றவியல் குற்றங்கள் நீதி மன்றத்தில் விசாரணை செய்ய்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கைகக்கு எதிராக தாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக SNC-Lavalin கடநத ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி அறிவித்தது.

The Globe and Mail வெளியிட்டுள்ள செய்தியில் இந்த சட்ட நடவடிக்கையினை கைவிடுமாறு நீதி அமைச்சர் Wilson-Raybould   மீத கடுமையான அழுத்தங்களை பிரதமர் அலுவலகத்தின் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ஒருவர் பிரயோகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை பிரதமர் Trudeau நிராகரித்துள்ளார்.

தன் மீது எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்பது குறித்தொ அதன் பின்ணிகள் குறித்தோ எந்த விதமான தகவல்களையும் வெளிப்படையாக வழங்க முடியாது என முன்னாள் நீதி அமைச்சர் Wilson-Raybould  கூறியுள்ளார்.

அரசாங்கத் தரப்பால் முன்னெடக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் காரணமாக கியுபெக் மாகாணத்தில் உள்ள தமது செயல்பாடுகள் அபாய நிலையை எட்டியுள்ளாதாக SNC-Lavalin கடந்த டிசெம்பர் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது Wilson-Raybould  நீதி அமைச்சு பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அவர் அமைச்சு பொறுப்பில் இருந்து தானாவே வெளியேறியுள்ளார். எனினும் தனது பதவி விலகலுக்கான காரணத்தை அவர் இதுவரை வெளியிடவில்லை.

இதைத் தவிரவும் இந்த விடயத்தில் இதுவரை சொல்லப்படாத செய்திகள் இருப்பதாகவும் இந்த விடயம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது. உண்மைகள் உறங்குவதில்லை என்பதால் இது குறித்த மேலதிகமான விடயங்களுக்காக நாமும் காத்திருப்போம்.



Comments

Popular posts from this blog

யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்... !

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

பனியில் தமிழ் எழுதி வெயிலில் வேகவிடும் ஒரு குரல்... !