கியூபா புரட்சி ஏற்பட்டு ஐம்பதாண்டுகள்

கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவை அதிகாரத்திற்கு கொண்டு வந்து, அமெரிக்காவின் வாசற்படியிலே கம்யூனிஸ்ட் நாடு ஒன்று உருவாவதற்கு காரணமான புரட்சி ஏற்பட்டு ஐம்பதாண்டுகள் ஆகியுள்ளதை குறிக்கும் நிகழ்வுகள் கியூபாவில் நடைபெற்றுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிகழ்வுகள் ஆடம்பரம் இல்லாமல் கொண்டாடப்பட்டுள்ளது.

இதனை குறிக்கும் வகையில் ஹவனாவில் நள்ளிரவின் போது இருபத்தோரு குண்டுகள் முழங்கின. ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் அதாவது 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி அன்று ஃபிடல் காஸ்ட்ரோ வெற்றியை அறிவித்த கட்டிடத்தின் மாடியில் இருந்தே ஃபிடல் காஸ்ட்ரோவிடம் இருந்து கடந்த ஆண்டு பொறுப்புகளை ஏற்று கொண்ட ராவூல் காஸ்ட்ரோ உரை ஆற்றினார்.

இதில் புரட்சி ஏற்பட்டு ஐம்பதாண்டுகள் ஆகியுள்ள போதும், புரட்சியின் அடிநாதம் இன்னும் மறையவில்லை என்றும் எதிர்காலத்தில் தங்களுடைய நாட்டின் கோட்பாடு தொடர்பாக பல சர்ச்சைகள் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த புரட்சியும், கியூபாவும் நீடித்து நிலைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.


இந்த நிகழ்வின் போது, ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் சர்வாதிகாரி ஃபுல்ஜென்சியோ பேட்டிஸ்டாவை அதிகாரத்தில் இருந்து வீசி எறிந்த ஃபிடல் காஸ்ட்ரோவை காணவில்லை.

கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் அறுவை சிகிச்சை நடந்த பின்னர் 82 வயதான ஃபிடல் காஸ்ட்ரோவை பொது இடங்களில் காண முடியவில்லை. புத்தாண்டிற்காக அவரிடம் இருந்து வரும் தொலைக்காட்சி செய்தியும் இல்லை, செய்தித்தாளில் அவர் வரையும் தலையங்கமும் இல்லை.

இதற்கிடையில், ஐம்பதாண்டு கால கொண்டாட்டங்கள் குறித்து அமெரிக்கா கூறுகையில், தாங்கள் கியூப மக்கள் சுதந்திரம் அடைய வேண்டும் என்று கோருவதை தொடர்வதாக கூறியுள்ளது.

- தமிழோசை

Comments

Anonymous said…
புதிதாய்.... என்னுடைய் தமிழ் டயரி...

பார்ப்பதற்கு | www.mytamildiary.blogspot.com
வணக்கம் ரமணன்,

இணையத்தில், வலைப்பதிவினூடாக தங்களை சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள். நிறைய உரையாடுவோம்.

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...

மீண்டும் வாழ்வோம்….