புது வருட தீர்மானங்கள்.

2009 மலர்ந்துள்ளது.இந்த வருடத்தில் இதை இதை எல்லாம் நிறைவேற்றி விட வேண்டும் என்று நம்மில் பலர் உறுதி எடுத்துக் கொள்ளும் நாள்.
உலகம் முழுவதும் இந்த தினத்தில் பரவலாக எடுக்கப்படும் தீர்மானங்களில் ஒன்று உடல் பருமனை குறைத்து ஸ்லிம்மாகுவது அல்லது கட்டுமஸ்தனாகுவது என்கதாகும்.

இதுவரை உனது உடல் பரும் பற்றி கவலைப்படாமல் இருந்த நான் இப்ப நிறைய கவலைப்பட ஆரம்பித்துள்ளேன்

அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஒன்று 30 + ஆகிவிட்ட வயது.என்னை நம்பி மட்டுமே இருக்கும் இரண்டு அன்பான ஜீவன்கள் கடந்த வருடத்தில் எனது கல்லூரி தோழனின் தீடிர் மரணம் மற்றும் அலுவலக நண்பருக்கு மேற்கொள்ளப்பட்ட தடைய கற்றல் சத்திர சிகிச்சை (3 நாளில் 6 இலட்சம் - செலவு)



பொதுவாக எந்த வரடத்திலும் சீரியசான தீர்மானங்கள் எதையும் எடுக்காதவன் வாழ்கையை அதன் போக்கில் போய் வாழ்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்

ஆனால் இந்த வருடம் எப்படியும் ஒரு 30 கிலோ எடையை குறைப்பது என்று கடுமையான தீர்மானம் போட்டிருக்கின்றேன்

இது நான் மட்டும் சம்பந்தப்படாத தீர்மானம் என்பதால் நிறைவேற்றுவதற்கு முடிந்த வரை முயற்ச்சிக்க வேண்டும்

எப்படியாவது ஒரு நல்ல பதிவு எழுதி நிறைய பின்னூட்டங்கள் வாங்கலாம் என்று தான் இதனை ஆரம்பித்தேன் அடிக்கடி தளம் தாவும் கண்ணில் இப்பதான் பி.பி.சியின் இந்த பதிவு கண்ணில் பட்டு தொலைத்தது

தீர்மானங்கள் உங்கள் உடல் நலத்திற்கு கேடானவை என்ற தலைப்பே தூக்கி வாரிப்போட்டது.புகைத்தல்,குடித்தல் எல்லாம் உடல் நலத்திற்கு கேடனாது என்று அறிந்திருந்தாலும் “தீர்மானங்கள்”கேடனாவை என்பது கொஞ்சம் விவகாரமான விசயம் தானே.

மனித மனங்கள் மற்றும் அவற்றின செல்பாடுகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இதனை கண்டறிந்திருக்கின்றார்களாம்(பேருக்கேத்த மாதிரியே தன்னாவமாய் எங்களுக்கு துன்னம் தாராங்களப்பா..)

நாங்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத போது எழும் விரக்தி மற்றும் ஏமாற்றங்கள் எங்கள் மனதையும் பின்னர் உடல் நிலையினையும் பாதித்து வருவதாக அவர்கள் கண்டு பிடித்திருக்கின்றார்கள்
வாழ்கையை அதன் போக்கில் வாழவ்து ஆரோக்கியமானது என்று பரிந்துரை வேறு –கொஞ்ச நாளைக்கு முதல் இதனை போடடிருந்தாலாவது “செய்யக் கூடிய” “செய்யக் கூடாதது” என்ற பட்டியலோடு வந்து நின்ற மனைவியையாவது சமாளித்திருக்கலாம்.ம் ம் என்ன செய்ய –(அந்த லிஸ்ட் ரொம்ப பெரிசு எதாவது ஒரு பதிவில் அதனை தருகின்றேன்.)



குறிப்பாக உடல் பருமனை குறைப்பது மற்றும் பதிய பணியில் சேர்வது குறித்த தீர்மானங்களே அதிகளவு எதிர் மறை கருத்துக்களை தோற்றுவிப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் (அடப்பாவிகளா எங்க தான் மணந்து பிடிக்கிறாங்களோ)
பிரச்சினைகள் பற்றிய சிந்தனைகள் ,பாதுகாப்பின்மை குறித்த அச்சம் போன்றவை எதிர்காலம் குறித்த நம்பிக்கையீனங்களை மனதில் ஏற்படுத்தி விடும் என்றும் அந்த நம்பிக்கையீனங்கள் எதிர் மறை சநித்தனைகiளாக மாறி எங்கள் செயல்பாடுகளை பாதிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
தீர்மானங்கள் எடுப்பதை விடவும் புதிய ஆண்டவை துணிவோடும் நேர் எண்ணங்களோடும் எதிர்கொள்வது சிப்பானது என்பது அவர்களின் பரிந்துரை.
இந்த ஆண்டில் உங்களால் சாதிக்கக் கூடிய விடயங்கள் பற்றிய நேர் எண்ணங்களை வளாத்துக் கொள்ளவதன் மூலம் நினைத்தவறறை விட அதிகமானவற்றை அடைய முடியுயும் என்று அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

இதில் உண்மைகள் இருப்பதை என்னாலும் உணர முடிகின்றது 2008ம் ஆண்டு பிறக்கும் போது நம்பிக்கைகள் மட்டுமே என்னிடம் இருந்தன ஈடுசெய்ய முடியாத இழப்பில் இருந்து விடுபட முடியாத சோகத்துடன் நம்பிக்கைகளை மட்டுமே சொந்தமாக கொண்டு 2008 ம் ஆண்டை நான் எதிர் கொண்டேன.அப்போது என்னிடம் இருந்தது நம்பிக்கை மட்டுமே அந்த நம்பிக்கை எனக்குள் தோற்றுவித்த அதிர்வுகள் அந்த நம்பிக்கையில் நான் அடைந்த வெற்றி எல்லாமாக சேர்ந்து பழுதற்ற ஆண்டாக கடந்த ஆண்டை எனக்கு வழங்கியிருக்கின்றது

இந்த ஆண்டின் முதல் நாள் திட்டமிடாத வகையில் எனக்கு படிக்க கிடைத்த நூல் கூட “பெரிய சிந்தனைகள்“ மற்றும் “நேர் எண்ணங்களை வளர்தல்” பற்றியதாகவே அமைந்திருந்து.




எண்ணங்களின் வலிமை குறித்து அதிக நம்பிக்கையை எனக்க கடந்த வருடம் ஏற்படுத்தியதால் இந்த வருடமுமம் எண்ணங்களின் பலத்தில் வாழவே விரும்புகின்றேன்.


தனிப்பட்ட தீர்மானங்களை எடுத்து அதில் சிக்கி தவிக்காமல் இருக்க சில ஆலோசனைகளையும் அந்த மன வள ஆலோசைனை அமைப்பு முன்வைத்துள்ளது

1.சுறுசுறுப்பாக இருங்கள் : உங்களுடைய அதிகரித்த உடலசைவுகளினால் வெளிப்படும் இரசாயனங்கள் உண்க் மனதை புத்துணர்வுடன் வைத்திருக்குமாhம்

2. இயற்கையுடன் இணைந்திருத்தல்: எண்ணங்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமாம்.

2.புதிதாக எதாவது ஒன்றை கற்றுக் கொள்ளல்.:ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய விடயத்தை நான் தெரிந்து கொள்கின்றேன் என்ற எண்ணம் உங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதுடன் தன்னம்பிக்கைகளையும் ஏற்படுத்தும்

4.சமூகத்திற்கு திருப்பி கொடுத்தல்: சமூகத்திற்கான பங்களிப்பு குறித்து உலக பெரு நிறுவனங்கள் முதல் ஊறூகாய் உற்பத்தியாளர்கள் வரை அக்கறைப்படுகின்றார்கள்.சிஎஸ்ஆர் என்ற துறை அனைத்து நிறுவனங்களிலும் தவிhக்க முடிhத அங்கமாகிவிட்டது.சமூகத்திற்கான உங்களின் உதவிகள் உங்களை நீங்களே கௌரவப்படுத்தும் ஒன்றாகும்

இதில் எல்லாம் எனக்கு உடன்பாடு உண்டு என்றாலும் நான் இந்த வருடம் மெலிந்தே தான் தீரூவேன்……

Comments

தீர்மானம் நன்றாக இருக்கிறது,

ஆனால், எழுத்துப் பிழை கஷ்ட்டப் படுத்துகிறது.

கவனம்...

முயன்றால் முடியாததில்லை...
Anonymous said…
நல்லா தீர்மாணங்கள் தான் அடுத்த வருடத்திற்கு மிச்சம் வைக்காமல் இருந்தால் சரி
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...
Ramanan said…
வணக்கம்
இனிய புதுவருட வாழ்த்துக்கள் பதிவுலகிற்கும் தமிழ் தட்டச்சிற்கும் புதியவன் என்பதால் எழுத்துப் பிழைகள் பொறுத்தருள்க விரைவில் திருத்திக் கொள்ள முயல்கின்றேன்
அண்ணா உடல் எடை குறைப்பிற்கு நானும் தயார்.நல்லதோர் கூட்டு இல்லாததுதான் பெருங் குறை..
மற்றப்படி தாங்களது அறிவுரைகளும், திட்டங்களும் சிறந்தவைததான்
Anonymous said…
இன்று தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன். வாழ்த்துக்கள்...
நான் தற்போது என்னால் முடிந்த சிறு பணியை செய்துவருகின்றேன். நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டிய ஒரு சீ.டி உள்ளது. எவ்வாறு அனுப்புவது? அதனை நீங்கள் கட்டாயகம் கேட்கவேண்டும். ஏனெனில் சாதனைகள் படைக்கப்பட வேண்டும்....உங்கள் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

(பிழைப்பிற்காக பேப்பர் போட்டவன். சைக்கிள் பஞ்சராகி அவசரமாக வந்து தட்டுத் தடுமாறிய போதும் யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் தூக்கி விட்டதற்காக என்றும் நன்றிகள்
குறுகிய காலத்தில் உங்களிடம் நிறைய பெற்றுக்கொண்டேன்.)
Anonymous said…
பின்னூட்டல் முழுமையாக வராமையினால் மீண்டும் எழுதுகிறேன்...

இன்று தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன். வாழ்த்துக்கள்... நான் தற்பொது என்னால் முடிந்த சிறு பணியை சமூகத்திற்கு செய்ய ஆரம்பித்துள்ளேன். நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டிய ஒரு சீ.டி. என்னிடம் உள்ளது. எவ்வாறு அனுப்புவது? அதனை நீங்கள் கட்டாயம் கேட்கவேண்டும். ஏனெனில் சாதனைகள் படைக்கப்பட வேண்டும். உங்களால் அது முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

(பிழைப்பிற்காக பேப்பர் போட்டவன். சைக்கிள் பஞ்சராகி அவசரமாக வந்து தட்டுத் தடுமாறிய போதும் யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் தூக்கி விட்டதற்காக என்றும் நன்றிகள். குறுகிய காலத்தில் உங்களிடம் நிறைய பெற்றுக்கொண்டேன்.) பின்னூட்டல் நீண்டிருந்தால் மன்னிக்கவும்.
Ramanan said…
நன்றி ஹரேன்
உங்கள் வருகைக்கு
நன்றி கூறுமளவிற்கு தங்களுக்கு எதையும்
நான் செய்யாத போதும் நட்புடன் இருப்பதற்கும் நன்றிகள்
எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்
sunramanan@yahoo.com

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...

மீண்டும் வாழ்வோம்….