Posts

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring

Image
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்று பெயர் வைப்பதற்கு தான் அவர்கள் முதலில் யோசித்தார்கள் பின்னர் அது ஆங்கில வடிவம் பெற்று இன்று  A Gun and a Ring   ஆக எங்கள் முன் காட்சிப்படுத்தபபட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினை காணும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது. சீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் மொன்ரியல் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் பெருமளவான எதிர்பார்பை ஏற்படுத்தி விட்டுள்ளதை அரங்கில் திரண்டிருந்த இரசிகர்களின் எண்ணிக்கை புலப்படுத்தியது. நம்வர்கள் படைப்புகள் என்றாலே தூர விலகி ஓடும் நம்மவர்களே நான்கு அரங்குகளிலும் இதன் முதல் காட்சியை பார்க்கும் ஆவலோடு காத்திருந்தமை ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி. அந்த ஆவலை எந்த வகையிலும் பாதிக்காத படைப்பாக அது அமைந்திருந்தது மகிழ்ச்சிக்குரியது. 80 களில் ஆரம்பித்த தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் 2009 ல் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை ஒரு தகவலாக அல்லது செய்தியாக மாற்றினங்கள் கடந்து போகக் கூடும் ஆனால் இந்த மூன்று தசாப்ப...

இசையின் சங்கமம்...Tunes of Passion

Image
தேசம் தாண்டுதல் என்பது மனிதர்களை பொறுத்தவரை வலி சுமக்கின்ற நிகழ்வாகவே இருக்கும். ஓடி விளையாடி கூடிக் களித்த மண்ணில் இருந்தும் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் என அத்தனையும் தொலைத்து விட்டு முற்றிலும்; அந்நியமான வாழ்க்கைச் சூழலுக்குள் பிடுங்கி வீசப்படுதல் என்பதும் கூட ஒரு வகை மரணம் தான். எத்தனை எத்தனை வசதிகள் வாய்ப்புகள், பாதுகாப்பு,கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் இன்னும் இன்னும் பலவாய் விரியும்; காரணிகளை புலம்பெயர் தேசங்களில் அனுபவிக்க முடிகின்ற போதிலும் தாய் மண்ணின் மணம் வீசும் காற்றினை தொலைத்தல் என்பது கொடுமையானது. அவ்வாறாக இழத்தலில் உயிர்க்கும் புதுவாழ்வில் தாய் மண்ணில் நாம் வாழ்ந்த நினைவுகளையும் தாய் மண் தந்து போன சுகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டு வருவது இங்கும் அழிந்து போகாமல் தொடரும் எங்கள் கலைகளும் பாராம்பரியங்களும் தான். இங்கு பிறந்து வாழும் அடுத்த  தலைமுறை தமிழ் பற்றிய அறிதலையும் புரிதலையும் கொண்டிருப்பதற்கு காரணம் இங்குள்ள ஊடகங்களினதும் கலைஞர்களினதும் அர்பணிப்புடனான பங்களிப்பு என்பது மிபை;படுத்தப்படாத உண்மை. தமிழின் எதிர்கால இருப்பிற்கான முனைப்புகளுக்கு தம...

நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?

Image
நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரசித்தமான உரையாடலின் வலிமிகு வரிகள் இவை. இந்த வரிகளின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையும் அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் வாழ்கை குறித்த புரிதலின் அடிப்படையானவை. உண்மையில் ஒவ்வொரு மனிதனின் உள்ளும் நல்லவனும் கெட்டவனும் வெட்டிப் பிரிக்க முடியாத இரட்டையர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எந்த ஒரு மனிதனும் நான் நல்லவன் என்று மார்தட்டிக் கொள்ள முடியாதபடிக்கு செவியில் அறையும் மறுமுகம் ஒன்று அவனுக்குள் இருக்கின்றது என்பது தான் யதார்தம். அவ்வாறு என்னால்  அல்லது செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் முதலில் மன்னிப்பு கோரிவிடுகின்றேன். என்னளவில் நான் நல்லவனாகவே உணர்கிறேன். ஆனால் எனது நடவடிக்கைகள் சிலரை காயப்படுத்தியிருக்கக் கூடும் என்பதை காலமாற்றங்கள் புரிய வைத்து விடுகின்றன. அது தற்செயலானதாய் அல்லது பின் விளைவுகள் குறித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் அற்ற தன்மையினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளினால் ஏற்ட்டிருக்கலாம். அல்லது திட்டமிட்டு வேண்டும் என்றே காயப்படுத்தும் நோக்கம் கொண்டதான செயலின் விளைவாக இருந்திருக்கலாம் எது எப்ப...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...

Image
கடந்து செல்லும் காலங்களில் நாங்கள் பல முகங்களை மறந்து விடுகின்றோம் அல்லது அந்த முகங்கள் எங்கள் மனங்களில் இருந்து விலகிச் சென்றுவிடுகின்றன. எங்கள் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் பங்கெடுத்த முகங்களும் கால ஓட்டத்தில் எங்கள் மனங்களில் இருந்து காணமால் போய் விடும் துயரங்களும் நிகழ்வாகின்றன. நான் ஒலிபரப்புத் துறையில் எதனையும் பெரிதாக சாதிக்கவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனினும் வானொலி நிகழ்சிகளின் போதோ சந்திப்புகளின் போதோ சிலர் எனது ஒலிபரப்பு குறித்து தெரிவிக்கும் பாராட்டுகள் என்னை குற்ற  உணர்ச்சி கொள்ளச் செய்கின்றன. இந்த பாராட்டுகளையும் வாழ்துக்களையும் எனக்கான அடையாளத்தையும் ஏற்படுத்தி தந்து விட்டு மௌனமாக கடந்து போகின்ற அந்த ஓரு மனிதர் குறித்து நான் என்ன செய்யப் போகின்றேன் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கின்றது. எனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கும் வாழத்துகளுக்கும் முழு முதல் காரணமானவர் அவர். கால ஓட்டத்தில் அவரின் முகம் சில வேளைகளில் எங்கள் மத்தியில் இருந்து மறந்து போகலாம் ஆனால் அவர் ஏற்படுத்தி விட்டுள்ள வானொலிக் கலாசாரம் என்றும் அவரின் பெயரை உரத்துச்...

தமிழ் மரபுரிமைத் திங்கள் 2013

Image
புதிய தேசத்தில் புதிய வாழ்கைச் சூழலில் இருந்து எழுத்தப்படும் முதலாவது பதிவு இது. 2011ம் ஆண்டு ஓக்ரோபர் மாதம் கனடாவிற்கு புலம் பெயர்ந்த பின்னர் இங்கிருக்கும் வாழ்கை முறைக்குள் வாழப் பழகுவதற்கான போராட்டங்களோடு ஒரு வருடம் கடந்தோடிப் போய்விட்டுள்ளது. இங்கும் எழுதுவதற்கும் பகிர்வதற்கும் நிறையவே விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கானநேரத்தை தேடி அடைவதென்பது சிரமமளிக்கும் ஒன்றாகவே இருந்த வருகின்றது. இந்த வருடம் சமூக வலைத்தளங்களில் அதிகம் இயங்குவதற்கு தீர்மானித்திருக்கிறேன்.அது சாத்தியமாகின்றதா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த பதிவின் நோக்கம் தமிழர்களின் தலைமாதம் குறித்த ஒரு சிறப்பானதும் முக்கியத்துவம் மிக்கதுமான வேலைத் திட்டம் தொடர்பான சில விடயங்களை பகிர்வதாகவே இருக்கின்றது. நான் கடமையாற்றி வரும் வணக்கம் எப்.எம் மற்றும் தமிழ் வண் தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடக பங்களிப்போடு இம்முறை ரொரன்ரோவில் தமிழர்களின் பாரம்பரிய மாதம் தொடர்பான வேலைத் திட்டங்கள் "தமிழ் மரபுரிமைத் திங்கள்" என்ற தொனிப் பொருளுடன் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மீதும் தமிழரின் பாரம்பர...

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

Image
இது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே. 99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன். இந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திர...

கூட்டு ஒப்பந்தம் - மலை முகடுகளில் மரித்துப் போகும் மனிதம்

Image
நேற்று ( 06-06-2011 ) பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தனமை குறித்த செய்திகள் ஊடகங்களின் பிரதான இடத்தை பிடித்திருந்தன. இனிவரும் இரண்டு வருடத்திற்கு அப்பாவித் தொழிலாளர்கள் வாய் திறக்க முடியாத படிக்கு ஒப்பந்த பத்திரங்களை தொழிற்சங்க எஜமானவர்கள் அவர்களின் வாய்களில் திணித்து விட்டனர். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தொழிலாளர்களை பிரதிநிதித்தவப்படுத்தும் குறிப்பிட்ட சில தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர். மூடிய அறைகளுக்குள் நடக்கும் இந்த ஒப்பந்த பேரத்தில் பேசப்படும் விடயங்கள் முழுமையாக அறியக்கிடைக்காது. இறுதியில் இத்தனை ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற ஒற்றை வரிச் செய்தி மட்டுமே வெளியாகும். இம்முறையும் ஆகக்குறைந்தது 500 ரூபா அடிப்படைச் சமபளம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வழமைபோல மலை உச்சிகளில் மலைச் சரிவுகளில் விழுந்து இறந்து போய்விட்டன. அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவில் இருந்து 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 380 ரூபா என்ற இலக்கை அடைந்துள்ளது அதாவது வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின்...