என்னத்த சொல்ல... வட போச்சே
கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசனின் இலங்கை விஜயம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகப் பரப்பிலும் விவாதங்களையும் கேள்விகளையும் தோற்றுவித்துள்ளன. இது தனிப்பட்ட விஜயம் தான் பிறந்து வளர்ந்த மண்ணையும் தனது உறவினர்களையும் சந்திப்பதற்கான விஜயத்தையே தான் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மீள வலியுறுத்தியிருக்கின்றார். தன்னை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருப்பதான ஒரு செய்தி இறுதியாக வெளியாகியிருக்கின்றது.தான் கைது செய்யப்படவோ அல்லது நாடு கடத்தப்படவோ நேரிடும் என இலங்கை அதிகாரிகள் தம்மை அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் நிலைமையை எதிர்நோக்க நேரிடலாம் என இலங்கை அதிகாரிகள் தமக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், வீட்டுக் காவலில் வைத்திருந்ததாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார். இலங்கை அதிகாரிகள் தம்மை வீட்டுக் காவலில் வைத்திருக்கவில்லை எனவும், எச்சரிக்கை ...