ஊடக மயக்கங்களும் மருந்துகளும்


அண்மை நாட்களில் என் துறை சார்ந்த இரண்டு விடயங்கள் அதிக ஈர்ப்பினை ஏற்படுத்தி விட்டுள்ளன. ஓன்று “இருக்கிறம்: சஞ்சிகையில் வெளியான கட்டுரை மற்றையது வெற்றியில் ஒலிபரப்பான வானொலி ஒன்றிற்கான மடல்.


இரண்டுமே இலத்திரனியல் ஊடகங்களின் போக்குகள் குறித்த சமகால விமர்சனப் போக்குகளின் அடிப்படையில் நோக்கப்படக் கூடியவை. இவை இரண்டினதும் படைப்பாளிகள் வேறுபட்ட தளங்களில் இருந்து தமது விமர்சனங்களை முன்வைக்க முற்பட்ட போதிலும் இரண்டு விமர்சனங்களினதும் பொதுத் தன்மையானது இலத்திரனியல் ஊடகங்களின் மீதான ஆதங்கங்களையே வெளிப்படுத்தியுள்ளன.

“இருக்கிறம”; கட்டுரையில் கட்டுரையாளர் முன்வைத்த பல குற்றச்சாட்டுகளை என்னால் முற்றாக நிராகரிக்க முடியவில்லை ஆனால் அந்த கட்டுரை மீதான ஊடகத்துறை நண்பர்களின் முக்கிய எதிர்பிற்கு காரணம் அந்த கட்டுரையாளர் பற்றியதாகவே எழுகின்றது.

அவர் கூறிய விடயங்களை தவிர்த்து அவர் யார் ? அவரின் பின்னணி என்ன ? அவர் இந்த கட்டுரையை எழுத காரணம் என்ன என்பது போன்ற வாதங்கள் அதிகம் முன்வைக்கப்படுகின்றது.

இரு தடவைகள் அந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தேன் நான் கடந்த 10 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகத் துறை சார்ந்த எனது வருத்தங்களில் பலவற்றை அந்த கட்டுரை கொண்டுள்ளமை மறுக்க முடியாதுள்ளது.

இலங்கையின் இலத்திரனியல் ஊடகத்துறையில் நிரந்தர இடம் பிடித்துக் கொண்டவர்கள் நீங்கலாக புதிதாக வருகின்றவர்களின் நிலமைகள் கவலைக்கிடமாகவே தான் இருக்கின்றன.

நான் ஒரு ஒலிபரப்பு ஊடகவியலாளன் என்ற வகையில் வானொலி சார்ந்த எனது கருத்துக்களை இது தொடர்பில் முன்வைப்பதும் ஆராய்வதும் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்

ஊடகங்களின் நிகழ்ச்சி வடிவங்கள் முற்று முழுதாக வியாபார நோக்கம் கொண்டவையாகவே வடிவமைக்கப்பட்டுள்ளமை தான் புதியவர்கள் இணையவும் தனித்துவமான தமது திறமைகளை வெளிப்படுத்தவும் முடியாத படிக்கு நிலமைகளை மாற்றி வைத்துள்ளது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்

அனைத்து தனியார் வானொலிகளும் இரண்டு அல்லது மூன்று மணி நேர நிகழ்ச்சி அமைப்புகளை கொண்டுள்ளன. இதனால் ஒரு வானொலியின் வார நாட்களில் 8 விதமான நிகழ்சிகளையே வழங்க முடிகின்றது.


இந்த 8 நிகழ்ச்சிகளில் நள்ளிரவு நேர நிகழ்சி தவிர்ந்த ஏனைய 7 நிகழ்ச்சிகளுக்கும் 14 அறிவிப்பாளர்கள் ( ஓரு நிகழ்ச்சிக்கு இருவர்) போதுமானவர்கள். குறிப்பிட்ட அறிவிப்பாளர்களுக்கென நிரந்தரமாகவே வழங்கப்பட்டுள்ள இந்த நிகழ்சிகளில் மாற்றங்கள் ஏற்படுவது குதிரைக்கொம்பாகவே உள்ளது.

அதனால் ஒரு குறிப்பிட்ட நிகழ்சியை ஒரு அறிப்பாளர் வருடக் கணக்கில் அந்த நிகழ்ச்சியை கட்டி மாரடிக்கம் நிலை இருக்கின்றது.

அறிவிப்பாளர் வானொலியில் இருந்து வெளியேறினால் அல்லது முகாமைத்துவத்துடன் முரண்பட்டால் மட்டுமே நிகழ்ச்சி மாற்றங்கள் சாத்தியமாகும் நிலை தான் அன்று முதல் இன்று வரை தொடர்கின்றது. இந்த மாற்றத்திற்காக ஒவ்வொரு வானொலியிலும் நாளைய ஒலிபரப்பாளர்கள் காத்திருக்கின்றார்கள். இவர்வகள் நிரந்தர நிகழ்ச்சி பெறும் வரை பயிற்சி அறிவிப்பாளர் அல்லது பகுதி நேர அறிவிப்பாளர்களாகவே கருதப்படுவார்கள்.

அவர்கள் குறித்து “இருக்கிறம்” கட்டுரை இவ்வாறு பேசுகின்றது ஃஃ

இலங்கையிலே மிகவும் குறைவாக சம்பளம் பெறுவோரின் பட்டியலில் இவர்களின் பெயர்தான் முதன்மை வகிக்கும். அதிலும் எவ்.எம் வானொலிகளில் பணியாற்றும் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை மென்று விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜீவிதத்தின் பிடிமானம் குறைந்து எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளோடு அலைகிறார்கள். 'கொழும்பு காசு இல்லாவிட்டால் எலும்பு' என்ற நிலை வரும் போது ஊடகத்தில் மகனுக்கோஇ மகளுக்கோ ஊரிலிருந்து யு.வு.ஆபணம் அனுப்பும் அப்பாவிப் பெற்றோர்கள் எத்தனையோ பேர். ' இதைவிட இவன் என்னோடையே இருந்து ஆடுஇ மாடாவது மேய்ச்சிருக்கலாம்' என்று ஒரு அப்பா சலிக்கிற நேரமா பார்த்து 'ஹலோ யாரு பேசுறீங்கஇ உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும்' என்று ஏதோ ஒரு அலைவரிசையில் பேசிக்கொண்டிருப்பான் மகன். அந்த வரட்டு சந்தோஷத்தில் தன்னை சமாதானப்படுத்திக் கொள்ளும் தாய்மார்களும்இ தந்தைமார்களும் எத்தனை பேர்?

பயிற்ச்சி அறிவிப்பாளர்களுக்கு இப்பபோது போக்குவரத்திற்காவது ஒரு தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது. வெளியிடங்களில் இருந்து அறிவிப்பாளர் கனவுகளுடன் கொழும்பிற்கு வரும் இவர்களின் இருப்பிற்கு நிச்சயமாக அந்த தொகை போதுமானதல்ல என்பதும் அவர்கள் தமது பெற்றோரிடம் இருந்தோ உறவினர் நண்பர்களிடமிருந்தோ மேலதிக பணத்தை பெறவேண்டியவர்களாகவே உள்ளனர் என்பதுவோ மறுக்கக் கூடியதல்ல.

பகுதி நேர அறிவிப்பாளர்களின் நிலையும் இவர்களை ஒத்தது தான் அவர்கள் வழங்கும் நிகழ்சிகளுக்கு மணித்தியாலத்திற்கு 100 ருபா வழங்கப்படுகின்றது. இவர்களுக்கும் வாரத்தில் ஒரு சில மணித்தியால நிகழ்சிகளே வழங்கப்படுவதால் கொழும்பில் வாழ்வதற்கான வசதியை அவர்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியாது.

வானொலி அறிவிப்பாளன் என்ற ஒற்றை மந்திரச் சொல்லுக்காய் இவ்வாறனவர்கள் இழப்பவை ஏராளம்.

மறுபுறம் நிரந்தர அறிவிப்பாளர்களின் நிலை வேறுபாடானது என்பதும் அதனை கட்டுரையாளர் மிகக் கவனமாக மறந்து விட்டுள்ளார் அல்லது மறைத்து விட்டுள்ளார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

இலங்கையில் தனியார் துறையில் உள்ள ஊழியர்கள் பெறும் சம்பளத்திற்கு ஒப்பான அல்லது அதை விட அதிகமான சம்பளம் நிரந்தர அறிவிப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.

வருடாந்த சம்பள அதிகரிப்பு காப்புறுதி வசதிகள் தொலைபேசி கட்டணம் என வேறு பட்ட பல வசதிகளும் உண்டு என்பது தனிக்கதை.

ஆனால் அந்த நிலை என்பது அவர்கள் சிவப்புக் கம்பளத்தில் ஏறி நடந்து வந்து அடைந்தது என்று எவரும் நினைத்து விடக் கூடாது.

இன்று அந்த நிலைக்கு வருவதற்கு முன்பாக அவர்கள் கடந்து வந்த பாதைகள் கசப்பானவை என்பதை எவரும் மறந்து விடவும் முடியாது.

முயன்றால் முயடிhதது இல்லை என்பதற்கு எங்களின் அறிவிப்பாளர்களை விடவும் சிறந்த உதாரணம் இல்லை.

எனவே சிகரங்களை தொட வேண்டும் என்று கனவுகள் இருந்தால் நீங்கள் கற்களும் முட்டகளும் நிநை;த பாதைகளை கடந்து தான் ஆக வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

ஆனால் கட்டுரையாளர் எல்லா அறிவிப்பாளர்களும் சோற்றுக்கு வளியற்று அலைபவர்கள் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைந்துள்ளமை வேதனைக்குரியது.

போராடினால் தான் ஜெயிக்க முடியும் என்பது தான் எப்போதைக்குமான உலக பொது மறையாக கொள்ளப்படுகின்றது. தக்கன மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்ன டாவினீசிய கோட்பாடு இங்கும் பொருந்தும்.

தப்பிப் பிழைக்கும் தகைமை உள்ளவர்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு தற்போது வானொலிகளில் உள்ள ஒவ்வொரு அறிவிப்பாளனும் சாட்சி. இந்த துறையில் வாழ்கை வளம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதாக நீளும் கட்டுரையாளரின் அடுத்த கேள்வி இது திறமையை வெளிப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுக்கும் களங்களில் வாழ்க்கை வளம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்க வேண்டும்.

இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்படுத்தித் தரவேண்டும். அதைவிடுத்துஇ அனுபவிப்பவர்கள் அனுபவிக்கஇ வாழ்க்கையில் போலி அரிதாரம் பூசி நடிப்பவர்கள் அறிவிப்பாளர்களா? நிச்சயமாக வாழ்கை வளம் பெறுவதற்கான வாய்ப்புகள் எல்லா இடங்களிலும் கொட்டிக் கிடக்கின்றது அதனை சரியான முறையில் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டியது அவசியமானது.

இந்த உலகம் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் வாழ்கையை வளமானதாக்க முடியாது என்பது ஏற்புடையதல்ல.

ஆனால் அதற்கும் போராட வேண்டும் அறிவிப்பு துறை மட்டுமே போதும் என்று இருந்து விட்டால் அந்த வட்டத்திற்குள் இருந்து விட்டு விடுதலையாக முடியாது போய்விடும். இந்த துறையை பிரபலமடைவதற்கான ஒரு வழியாக மட்டமே நோக்கினால் அங்கேயே தேங்கி விட வேண்டிய ஆபத்தும் இருப்பது மறுப்பதற்கில்லை.

ஆனால் இந்த துறையில் இருந்து அடுத்த கட்டங்கள் நோக்கிய முன்னேற்றங்களை சரியான முறையில் மேற்கொண்டால் வாழ்கை வளமாக நிறையவே வாய்ப்புகள் இந்த துறையிலும் உண்டு.

வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்கும் இந்தத் தொழில் தேவைதானா?

இந்தக் கேள்வியை முக்கியத்துவமாகப் பார்க்கவேண்டும். சாதாரண அறிவிப்பாளார்களாக வானொலிகளில் இணைந்து கொண்ட எனது நண்பர்கள் லோசன் மற்றும் நவநீதன் ஆகியோர் இன்று அவர்களின் வானொலிகளை முகாமைத்துவம் செய்யும் முகாமையாளர்களாக உயர்ந்துள்ளார்கள்.

எனக்கு தெரிந்த மற்றுமொரு நண்பர் ஒருவர் பகுதி நேர அறிவிப்பாளராக தனது தொழிலை ஆரம்பித்தவர் இன்று ஒரு ஊடக நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் முகாமையளராக மாறியுள்ளார். இவர்கள் அறிவிப்பாளர்களாக அறியப்பட்டவர்கள் தமது தனிப்பட்ட திறமைகளால் தகுதிகளால் இன்று உயர் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர்கள் தமது வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கும் போது இதனை வாழ்வை வளம் படுத்த முடியாத துறையாக சித்தரிக்க முயல்வது எந்த வகையில் நியாயாம்.

ஏந்த துறையிலும் பசை போட்டு ஒட்டிக் கொண்டு இது போதும் எனக்கு என்று இருக்கும் கதிரையை மாற்ற விரும்பாதவர்களுக்கு அடுத்த கட்டங்கள் நோக்கில் நகர முடியாது அது இந்த துறைக்கும் பொருந்தும்.

அவர்களை விதிவிலக்குகளாக தான் பார்க்க வேண்டமே தவிர அவர்கள் தான் ஒலிப்பரப்பு துறையின் குறியீடுகள் என்று கொண்டாடக் கூடாது ஆனால் உலக இயங்கியலை சரிவர புரிந்து கொண்டு தமக்கான வாய்புகளை நோக்கி முன்னேறுபவர்களுக்கு இது சரியான தளமாகவே அமையும்,அமைந்தும் உள்ளதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

ஆனால் அறிவிப்பாளர் நிலை மட்டுமே போதும் அதில் வரும் புகழ் போதையில் வாழ்வை நகர்த்தலாம் என்ற எண்ணங்களுடன் மட்டும் வாழ்பவர்கள் நிச்சயம் மாற வேண்டும் என்பது எனது மாற்றமடையாத விருப்பம்.

நான் சந்தித்த ஒவ்வொரு அறிவிப்பாளர்களிடத்திலும் உயர் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் நான் அதிகமாக விவாதித்திருக்கிறேன்.

அறிவிப்புத்துறைக்கு வந்த பின்னர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் போகின்றவர்கள் அல்லது அந்த பக்கத்தை முற்றாக மறந்து போகின்றவர்கள் குறித்த வருத்தம் எப்போதும் இருக்கின்றது.

ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவாகவே கொள்ளப்பட வேண்டும் ஒரு அறிவிப்பாளன் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ உயர் கல்வி பெறுவதையோ எந்த வானொலியும் தடை செய்யவில்லை.

தங்கள் முன்னேற்றங்களின் மீது அக்கறையுள்ளவர்கள் அதனை சரிவர பயன்படுத்தினால் மேலும் சிறப்பாகலாம் என்பது எனது நிலைப்பாடு.

அடுத்து கட்டுரையாளர் முன்வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு

காலம் காலமாக இன்றைய ஒளிஇ ஒலி ஊடகங்களில் அரங்கேறும் அசிங்கங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இப்போதெல்லாம் மழை பெய்யாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அத்தனை அசிங்கங்கள். அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர்கள் புரியும் மாயலீலைகள் தந்திரங்கள் கொஞ்சமா? நஞ்சமா ?

இது இந்த துறைக்கு மட்டுமேயோன குற்றச் சாட்டாக நோக்க முடியாதது என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதே அளவிற்கு இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று மறுக்க முடியாத நிலை நிலவுவதும் வேதனையானது தான்.

வானொலி அறிவிப்பாளர் நிலையில் நான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் ஏராளம் ஆனால் அதே போன்ற அனுபவங்களை மென்பொருள் பொறியிலாளானாக கடமையாற்றும் எனது நண்பன் ஒருவனும் சந்தித்துள்ளான்.

ஆக இது துறை சார்ந்த விடயமாக நோக்கப்பட வேண்டியதொன்றல்ல மாறாக மனித நேயம் சார்ந்து தனி மனித ஒழுக்கம் சார்ந்து பார்க்கப்பட வேண்டியது என்பதே எனது நிலைப்பாடு.

குத்து வெட்டுகள்,காட்டிக் கொடுப்புகள், துரோகங்கள், துஸ்பிரயோகங்கள் என இந்த துறையின் அத்தனை துன்பங்களையும் நானும் தரிசித்திருக்கிறேன் தனிப்பட்ட முறையில் இவற்றால் பாதிக்கப்பட்டும் இருக்கின்றேன் என்பதால் இதனை மறுக்க முடியவில்லை.

ஆனால் இது ஒலிபரப்பு துறையில் மட்டமே நிலவும் குறைபாடாக கொளவதை என்னால் ஏற்றக முடியாது என் துறை சார் நண்பர்களும் இதனை ஏற்றுக் கொள்ளவார்கள் என்றே நம்புகின்றேன்.

ஒரு சிலர் விடுகின்ற மிக மோசமான பிழைகள் அவர்களை போலவே விரைவில் பிரபலமாகி விடும் அபாயம் இந்த துறையில் இருப்பதால் தான் இது போன்ற விமர்சனங்களும் தவறான அனுமானங்களும் ஊடகத்துறை மீது விழுகின்றன.

ஜனூஸ் என்ற முகம் தெரியாத ஒருவர் அல்லது ஊடகத் துறையின் ஊடு பொதுவாக அடையாளப்படுத்தப்படாத ஒருவரால் முன்வைக்கப்படும் இது போன்ற விமர்சனங்களை தனிப்பட்ட சிலர் மீதான தங்களின் கோபதாபங்களுக்காக பிரசுரித்து ஆறுதல் தேடிக் கொள்வது “ இருக்கிறம்” போன்ற ஒரு ஊடகத்திற்கு அழகல்ல.

அதே போல் ஊடத்தின் பக்க்சார்பின்மை என்ற அடிப்படையினையும் குறிப்பிட்ட கட்டுரையும் இருக்கிறம் சஞ்சிகையும் மீறியுள்ளன.

இந்த கட்டுரையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களின் அதிகாரிகளிடம் கருத்தினை அறிந்து அதனையும் இணைத்திருக்க வேண்டியது அடிப்படை ஊடக தர்மம். அதனை கூட “இருக்கிறம்” கடைப்பிடிக்கவில்லை என்பது உண்மையில் வேதனையானது.

எந்த ஊடகத்தின் பெயரும் குறிப்பிடாதமையால் குற்றச்சாட்டுக்கள் பொதுவானவை என்ற அடிப்படையில் மாற்று தரப்பின் கருத்தினை பெறவில்லை என்று கூறுவது அழகல்ல.

இருக்கிறம் மீதான நம்பகத் தன்மையையும் அதன் ஊடகத் தரத்தையும் இது போன்ற கட்டுரைகள் குறைத்து விடும் என்பதால் இனியாவது மாற்றுக் கருத்துக்கான இடத்தை வழங்குவதற்கான குறைந்த பட்ச ஊடக நாகரீகத்தையாவது “இருக்கிறம்” கடைப்பிடிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

ஒரு வானொலி எழுதிய கடிதமும்..... .சில கேள்விகளும்

அண்மையில் வெற்றியின் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் ஒரு வானொலிக்கு கடிதம் என்ற தலைப்போடு ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

இலங்கையின் தமிழ் வானொலித் துறையின் சமகாலப் போக்குகள் குறித்த மிக நியாயமாக கவலைகளை அந்த நிகழ்ச்சி பதிவு செய்ததிருந்தது வரவேற்பிற்குரியது.

குறிப்பாக ஆங்கிலம் கலந்த அறிவிப்பு பாணி பற்றிதான ஆதங்கம் மற்றும் வெளிநாட்டு இறக்குமதிகள் குறித்த கவலை என அந்த கடிதம் மறை முகமாக மாற்று வானொலி ஒன்றின் நடவடிக்கைகளை கண்டிக்க தலைப்பட்டது.

அந்த கடிதம் முன்வைத்த கவலைகளை அல்லது விமர்சனங்களை என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் அந்த நிகழ்ச்சியை வழங்கிய அறிப்பாளர் தமிழை தமிழாக பேசியிருந்தால் அந்த நிகழ்ச்சி ஒரு காத்திரமான நிகழ்சியாக மாறியிருக்கும்.

அறிவிப்புத் துறையின் மிக அடிப்படையான தமிழ் உச்சரிப்பே சரியாக வராத ஒருவர் எவ்வாறு மற்றைய வானொலி மீது விமர்சனங்களை முன்வைக்கலாம் என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.

அந்த நிகழ்ச்சி நிச்சயம் ஒலிப்பதிவாகியிருக்கும் தயவு செய்து அதில் எத்தனை தடவைகள் அந்த அறிப்பாளர் தமிழில் தடக்கியுள்ளார் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அவதானிப்பது சிறப்பானது.

அதேபோல் அவரின் சொல் வறுமையும் நிகழ்ச்சி முழுவதும் வெளிப்பட்டது. ஒரே மாதிரியான சொற் தொடர்களையே அவர் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றார்.

ஒரு நிரந்தர நிகழச்சியும் ஒலிவாங்கியும் கிடைத்துவிட்டால் உலகை வென்று விட்டதாக நினைத்து எதனையும் செய்ய முற்படுவது ஒரு ஒலிபரப்பாளனுக்கு அழகல்ல.

உங்களை வளப்படுத்தி உங்கள் குறைகளை திருத்தி முழுமையடைவதற்கு முதலில் முயற்சி செய்யுங்கள். அதற்கு பின்னர் மற்றவர்கள் மீது நீங்கள் விமர்சனம் செய்யலாம்.

நீங்களே பலபேரால் விமர்சிக்கப்படும் நிலையில் இருந்து கொண்டு மற்றைய வானொலி மீது சுட்டுவிரல் நீட்டுவது அழகல்லவே …

எனவே இது போன்ற நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை வழங்குபவர் அதற்கு தகுதியுடையவரா என்தை அறிந்து கொள்வது நிகழ்ச்சியின் காத்திரத்தன்மைய அதிகரிக்கும்.

ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை ஆனால் நான் பணியாற்றும் நிறுவனம் அல்லது அந்த முகாமைத்துவம் எப்படி நிகழ்ச்சி செய்யப் பணிக்கின்றதோ அப்படித் தான் நான் பேசியாக வேண்டும்.

ஆங்கிலம் கலக்காத தமிழில் அறிவிப்பினை வெற்றி முதலில் செய்யட்டும் அதன் பின்னர் ஏனையவர்கள் பற்றி விமர்சிக்கலாம் என்று பலர் இந்த நிகழ்ச்சி பற்றி ஆதங்கப்படுகின்றார்கள்.

இது போன்ற கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறியும் நிகழ்ச்சிகளை விடுத்து தரமான புதிய சிந்தனைகளை படைப்பது தான் வளர்ந்து வரும் ஒரு அறிவிப்பாளருக்கும் வானொலிக்கும் அழகு.

Comments

KANA VARO said…
//இரு தடவைகள் அந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தேன் நான் கடந்த 10 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகத் துறை சார்ந்த எனது வருத்தங்களில் பலவற்றை அந்த கட்டுரை கொண்டுள்ளமை மறுக்க முடியாதுள்ளது.//

இவ்வாறான ஆழ்ந்த விளக்கம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது. அதை விடுத்து பொங்கி எழுவது எதைத் தரும்.?

எல்லா விடயங்களையும் ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டு வரலாம். ஊடகங்களில் ஏற்படும் பிரச்சினைகளை எதன் மூலம் கொண்டு வருவது?

இதற்கு பொங்குபவர்கள் பதில் அளிக்கலாம்?

இருக்கிறம் பொதுப்படையாக எல்லா விடயத்தையும் எழுதியைதைத் தவிர்த்திருக்கலாம். மற்றப்படி அக்கட்டுரை பிழையாக எனக்குப் படவில்லை.
உங்கள் கருத்துக்கள், விளக்கக்ங்கள் நன்று... அவற்றில் ஒரு பக்குவப்பட்ட தன்மையை உணர முடிகின்றது.

ஆனாலும் ஒரு இலத்திரனியல் ஊடகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒலி,ஒளிபரப்பாளன் என்கின்ற வகையில் எனது துறை தொடர்பில் தவறான அபிப்பிராயத்தை உண்டுபண்ணக்கூடிய இருக்கிறம் சஞ்சிகையில் வெளிவந்த மேற்படி கட்டுரைக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்..

நான் இந்த ஊடகத் துறைக்குள் வரவேண்டுமென்று எனக்கு பதின்நான்கு வயதிருக்கும்போதே தீர்மானித்திருந்தேன்.. கிட்டத்தட்ட ஏழு வருடங்களின் பின்னர் அது நிறைவேறியது... அந்தவகையில் ஊடகத்துறைக்குள் நுழையும் ஆவலுடன் இருந்த எனக்கு அல்லது எனது பெற்றோருக்கு இவ்வாறான ஒரு சிலரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட "ஊடக மயக்கம்" போன்ற கட்டுரைகளை வாசிக்கக் கிடைத்திருந்தால் இந்தத் துறைக்கு வரவேண்டும் என்கின்ற இலட்சிய வேட்கை முளையிலையே சிதைக்கப்பட்டிருக்கும்.. இதனால் நான் எனக்கு விருப்பமில்லாத ஒரு துறையில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பேன்..... ஆகவே இந்தக் கட்டுரை ஊடகங்கள் தொடர்பான பிழையான அபிப்பிராயத்தை உண்டுபண்ணக்கூடும்..

மேலும் இந்தக்கட்டுரையை எழுதியவர் ஒரு ஊடகத்தில் பணியாற்றிவிட்டு உச்சரிப்பு சிக்கலால் வெளியேற்றப்பட்டவர் என்றும் அறிகின்றேன்.. நான் எனது தனிப்பட்ட கருத்தாக பொறுப்பானவர்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம், நீங்கள் ஊடகங்களுக்கு அறிவிப்பாளர்களை தெரிவு செய்யும்போது முறையான நேர்முகத்தேர்வைப் பயன்படுத்துங்கள்.. ... மாறாக அரைகுறையில் தேர்வுகளைச் செய்து ஏன் தேவையில்லாமல் ஒருவரிடம் அறிவிப்பாளர் கனவை உருவாக்கி அவர்கள் வாழ்க்கையை வீணடிக்கின்றீர்கள்... இவ்வாறான ஒரு சூழல்தான் இதுபோன்ற விமர்சனங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது என்றும் சொல்வதற்கு இடமுண்டு..

அண்ணா இன்று ஊடகத் துறைக்குள் வருபவர்களில் பலர் நின்று நிலைக்காமைக்கு அவர்களிடம் முறையான தேடல்கள் இருப்பதில்லை என்பதுடன் அதிகமானவர்கள் பிரபலத்தை கருத்தில்க் கொண்டு இங்கு வருகின்றமையும் ஒரு காரணம் என்று நான் நினைக்கின்றேன்... இன்றைய காலங்களில் ஒருவர் உயர்தரம் படித்துக் கொண்டிருப்பார்.. அவருடைய இலட்சியங்கள், கனவுகள் வேறுபட்டவையாக இருக்கும்... நிலைமை இவ்வாறு இருக்கும்போது உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்துக்கொண்டிருக்கும் காலத்தில் கொஞ்சம் வானொலிப்பக்கம் வருவார்கள்... அப்போது யாராவது ஒரு அறிவிப்பாளரைப் பின்பற்றி அவரைப் போல பேசுவார்கள்... இதனைக் கேட்கும் இன்னொருவர் அவரை நீ ரேடியோவிற்கு போகலாமே என்று சொல்லுவார்... இவரிடமும் அந்த ஆசை மெல்ல எட்டிப் பார்க்கும்... நிலைமை இப்படி இருக்க பரீட்சைப் பெறுபேறும் வெளியாகும்... பல்கலைக்கழகம் கிடைக்கவில்லை என்றால் குறித்த நபர் ரேடியோவிற்கு யாராவது தெரிந்த ஒருவரின் சிபாரிசின் மூலம் செல்வார்... பெரும்பாலும் அவரை ஊடகங்கள் தெரிவு செய்யும்.. சில நாட்கள் பயிற்சி.. பின்னர் அறிவிப்பு... ஆஹா இவ்வளவுதானா என்று அவர்மனதில் ஒரு எண்ணம் தோன்றும்.. அதன் பின்னர் சொல்லவா வேண்டும்...

இவ்வாறானவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன்... அதற்காக ஊடகத்துறைக்குள் வருபவர்கள் எல்லோரும் இப்படியானவர்கள் என்று நான் சொல்லவரவில்லை... மேலும் எல்லா ஊடகங்களும் இவ்வாறானவர்களைத்தான் தெரிவு செய்கின்றன என்றும் நான் சொல்லவரவில்லை... நான் பிறந்தது முல்லைத்தீவு என்கின்ற காரணத்தினால் ஆரம்ப காலங்களில் சில ஊடகங்கள் என்னை ஒரு அறிவிப்பாளனாக இணைத்துக்கொள்ள நேர்முகத் தேர்வு செய்வதற்கே மறுத்த நிலையிலும் எனது ஊடகப் பயணத்தை தொடர்ந்துதான் இன்று ஒரு வானொலி அறிவிப்பாளனாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளனாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்...

இன்று வானொலிகளில் முக்கிய பொறுப்புக்களிலும், சிறந்த நிகழ்ச்சிப் படைப்பாளர்களாகவும் விளங்கும் சிரேஷ்ட ஒலி,ஒளிபரப்பாளர்கள் அனைவரும் ஒன்றில் இந்தத் துறைக்குள் வரமுன்னர் தங்களை வளர்த்துக் கொண்டு வந்தவர்களாகவும் அல்லது வந்த பின்னர் தங்களை மாற்றி அமைத்தவர்களாகவுமே உள்ளார்கள்... அன்றி அவர்கள் ஒன்றும் சாதாரணமாக முன்னேறியவர்கள் அல்ல...நீங்கள் சொன்ன லோஷன் அண்ணா, நவநீதன் அண்ணா போன்றோர் இதற்கு மிகச்சிறந்த உதாரணத்துக்குரியவர்கள்...

வெற்றி நிகழ்ச்சி நான் கேட்கவில்லை... ஆனாலும் அவ்வாறான நிகழ்ச்சிகளும் நேயர்களுக்கு சுவாரசியத்தை உண்டுபண்ணுபவையாக அமையலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.....
KANA VARO said…
// மயில்வாகனம் செந்தூரன். said...அந்தவகையில் ஊடகத்துறைக்குள் நுழையும் ஆவலுடன் இருந்த எனக்கு அல்லது எனது பெற்றோருக்கு இவ்வாறான ஒரு சிலரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட "ஊடக மயக்கம்" போன்ற கட்டுரைகளை வாசிக்கக் கிடைத்திருந்தால் இந்தத் துறைக்கு வரவேண்டும் என்கின்ற இலட்சிய வேட்கை முளையிலையே சிதைக்கப்பட்டிருக்கும்.. //

இது தான் அந்தக் கட்டுரையில் எனக்கும் எரிச்சலை ஊட்டிய பகுதி
மதிப்பிற்குரிய அன்ன நலமா நான் ஒரு தனியார் வானொலி பயிட்சிகால அறிவிப்பாளன் பலநாள் போராடி இந்த வாய்ப்பை பெற்றேன் பாதை சீராக போவது என்னவோ உண்மைதான் ஆனால் ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தின் சராசரி மனிதன் என்றவன் அடிப்படையில் எதிர்காலத்தை பற்றிய ஒரு வித பயம் காணப்படுவதும் உண்மையே .....ஊடகத்துறைக்கு வர முன்னர் நான் திரு.ஜெனூஸ் அவர்கள் எழுதிய இந்த கட்டுரையும் அது பதிவாலர்களினால் காரசாரமாக விமர்சிக்கப்பட்டத்தையும் கவனமாக அவதானித்தேன் ஜெயித்தவர்கள் பொங்குவதும் ,இந்த துறையில் தோற்றுப்போனவர்கள் (திறமை இருந்தும் ) ஜெனூஸ் பக்கம் சார்ந்ததாயும் கவனமாக பார்த்தேன் இவற்றில் எனக்கு ஈடபட்ட குழப்பம் அனைத்தும் இந்த கட்டுரையோடு ஓரளவு தெளிவடைந்ததாக உணர்கிறேன் உங்கள் கருத்துக்களில் கோபம் இல்லை மாறாக நல்லதொரு பக்குவமும் ,தெளிவும் தெரிந்தது நன்றி மீண்டும் உங்கள் குரலை வானொலியில் கேட்க ஆசைப்படும் ஒரு ......ரசிகன்....
மதிப்பிற்குரிய அன்ன நலமா நான் ஒரு தனியார் வானொலி பயிட்சிகால அறிவிப்பாளன் பலநாள் போராடி இந்த வாய்ப்பை பெற்றேன் பாதை சீராக போவது என்னவோ உண்மைதான் ஆனால் ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தின் சராசரி மனிதன் என்றவன் அடிப்படையில் எதிர்காலத்தை பற்றிய ஒரு வித பயம் காணப்படுவதும் உண்மையே .....ஊடகத்துறைக்கு வர முன்னர் நான் திரு.ஜெனூஸ் அவர்கள் எழுதிய இந்த கட்டுரையும் அது பதிவாலர்களினால் காரசாரமாக விமர்சிக்கப்பட்டத்தையும் கவனமாக அவதானித்தேன் ஜெயித்தவர்கள் பொங்குவதும் ,இந்த துறையில் தோற்றுப்போனவர்கள் (திறமை இருந்தும் ) ஜெனூஸ் பக்கம் சார்ந்ததாயும் கவனமாக பார்த்தேன் இவற்றில் எனக்கு ஈடபட்ட குழப்பம் அனைத்தும் இந்த கட்டுரையோடு ஓரளவு தெளிவடைந்ததாக உணர்கிறேன் உங்கள் கருத்துக்களில் கோபம் இல்லை மாறாக நல்லதொரு பக்குவமும் ,தெளிவும் தெரிந்தது நன்றி மீண்டும் உங்கள் குரலை வானொலியில் கேட்க ஆசைப்படும் ஒரு ......ரசிகன்....

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...

மீண்டும் வாழ்வோம்….