ஒரு யானை... ஒரு பாடம்... ஒரு கதை...
வருடம் பிறந்த போது பதிவிட்ட பின்னர் இந்த மாத இறுதியில் மற்றுமொரு பதிவிடும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. வழமை போல் தான் நேரமுகாமைத்துவ சிக்கல் தான் பதிவின் பக்கம் அண்டவிடாமல் செய்து வருகின்றது. நேற்று சர்வதேச வாத்தகம் தொடர்பான வகுப்பில் பேராசிரியர் ஒருவர் கூறிய கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. அமெரிக்காவின் பிரபலமான முகாமைத்துவ கற்கை பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹவார்ட் பல்கலைக் கழகத்தின் புதுமுக மாணவர்களுக்கான ஆரம்ப நாள் வகுப்பு அது பல்வேறு நாடுகளில் இருந்தும் புலமைப்பரீசில் பெற்று வந்த மாணவர்களால் நிறைந்திருந்தது முதல் நாள் மாணவர்களின் ஆளுமைகளை அறியும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு அம்சமாக பேராசிரியர் ஒருவர் யானை பற்றி எழுதுமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டார். மாணவர்கள் எழுதிய ஆய்வுகள் பற்றிய சுருக்க குறிப்புகள் இனி.. அமெரிக்க மாணவன் யானையின் பொருளாதார பயன்கள் அதன் மூலம் எப்படி அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்,அமெரிக்க பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்கு யானையை எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பது பற்றி ஒரு ஆய்வினை எழுதி முடித்தான். பிரித்தானிய மாணவன் யானையின் கு...