இந்தியா எதிர் சீனா , இலங்கையில் அடுத்த இனிங்ஸ் ஆரம்பம்.
உலகப் பொருளாதாரத்தில் இலாபகரமான வர்தகங்களில் ஆயுத வியாபாரமும் மருந்து பொருட்களும் முதன்மை வகிக்கின்றன. ஓன்று மனித இனத்தை அழிப்பதற்கும் மற்றையது மனித இனத்தை அழிவுகளில் இருந்து காப்பதற்குமான துறைகள் என்பது முரண்நகையானது. இரண்டு துறைகளினதும் தாக்கங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகம் இருப்பதை கடந்த காலங்கள் எமக்கு தெளிவு படுத்தி நிற்கின்றன. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நிலவும் போர்சூழலின் பின்னணியில் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிழல் கரங்கள் எப்போதும் இருந்து வருகின்றன. அதேபோலவே மருந்துப் பொருட்களின் உச்ச பாவனை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையே சார்ந்து இருக்கின்றது. இந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாற முடியாதபடிக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் காண்பித்து வரும் “அதீத அக்கறையின்” பின்னணியில் அவர்களின் ஆயுதங்களும் மருந்துகளும் மறைந்திருப்பது புரிதலுக்குரியது. ஆயுத வர்த்தக போட்டிகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் ஈடுபாடானது எந்த ஒரு நாட்டிலும் மோதலில் ஈடுபடும் இரு தரப்புகளுக்கான வெளி ஆதரவாக விரிவடையும். வெளிப்படையாக மோதல்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து ...