சீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி !!!

பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.

 இது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.

ஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போது கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளிற்கிடையிலான 2.5 பில்லியன் டொலர் மதிப்பீட்டிலான 20ற்கும் மேற்பட்ட வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.. 

இவற்றின் ஊடாக கனடாவில் புதிதாக 2000 தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் பிதமர் ஹார்பர் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஒன்ராறியோ மாகாண முதல்வர் கத்தலின் வீன் அம்மையார் சுமார் 1 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனாவில் இருந்தான அதிகரித்து வரும் இறக்குமதிகளுக்கு ஈடாக ஏற்றுமதிகளை செய்ய முடியாத நிலையில் கனடா சிக்கியுள்ளதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ஆம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் 70 வீதமானது சீனாவில் இருந்தான சீன உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி என்பது கவனிக்கப்பட வேண்டியது. மறுபுறம் கடனாவில் சீனா மேற்கொண்டுள்ள முதலீடுகளில் ஐந்தில் ஒரு பங்கு முதலீடுகளையே கனடா சீனாவில் கொண்டுள்ளது.இரு தரப்பு வர்தக உறவுகளின் சமனிலையில் இந்த இரு விடயங்களும் அதிகனவு முக்கியத்துவத்தை கொண்டுள்ளன.

இவை குறித்தே கனேடிய பொருளாதார நிபுணர்களும் கவலை கொண்டுள்ளார்கள்.
கனேடிய பிரதரின் இந்தய விஜயத்தை தொடர்ந்து நாங்கள் புளுபெரி பழங்களையும் ஸ்ரோபெரி பழங்களையும் சீனாவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப் போவதான தகவல் வெளியாகியிருக்கின்றது. கனடாவின் மத்தியில் கொன்ஸ்வேட்டிவ் கட்சியும் ஒன்ராறியோவில் லிபரல் கட்சியும் ஆட்சி செய்கின்ற போதிலும் இரண்டிற்கும் சீனாவின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது என்பதேில் இருந்தே உலக பொருளாதாரத்தில் சீனா அசைக் முடியாத பெரும் பலமாக மாறிவிட்டுள்ளதை நாங்கள் புரிந்து கொள்ள முடியும்.

 கனடாவின் மத்திய அரசாங்கத்தினதும் முக்கியமான மாகாண அரசாங்கத்தினதும் சீனா மீதான காதல் வெறுமனே வர்த்தக பொருளாதார அடிப்படைகளை மட்டும் கொண்டதல்ல என்று புரோக் கல்கலைக்கழக பேராசிரியர் சாளஸ் போர்டன் அது தேர்தல் வெற்றி ஒன்றையும் நோக்கமாக கொண்டது என்றும் அவர் கூறுவதில் உண்மைகள் இல்லாமல் இல்லை கனடாவில் குறிப்பாக ஒன்ராறியோவில் நடைபெற்ற தேர்தல்களில் இங்கு வாழும் சீன மக்களின் அரசியல் ஈடுபாடு கணிசமாக அதிகரித்திருப்பதை காண முடிகின்றது.

நேரடியாக தேர்தலில் போட்டியிடுவதற்கும் அவர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பிலும் கனடாவில் உள்ள சீன மக்கள் மிகவும் அதிகளவான அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர். இந்த நகர்வும் கூட மத்திய மற்றும் மாநில அரசுகளை சீனாவிற்கு சார்பான அல்லது சீனாவுட் சமூகமான உறவினை கொண்டுள்ள அரசுகளாக அல்லது கட்சிகளாக தம்மை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன.

 அதிமான மனித உரிமை விடயங்கள் குறித்து அக்கறை கொண்டுள்ள கடனா சீனாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடந்த காலங்களில் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வந்தது. இம்முறை விஜயத்தின் போது மனித உரிமை நிலமைகள் குறித்தும் இராஜதந்திர உறவுகள் குறித்தும் தமது கரிசனையை வெளியிட்டிருப்பதாக தனது விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர் பிரதமர் ஹாபர் கனேடிய ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றார்.

 இதேபோல் கனடாவிற்காக உளவு பாரத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கெவின் மற்றும் ஜீலியா கரட் தம்மபதியினர் இன்னமும் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இன்றும் கனடாவின் அரசியல் முக்கியத்துவம் தகவல்களை அரசாங்க கணனிகளுக்குள் உள் நுழைந்த சீனாவின் இணையத் தகவல் திருடர்கள் திருடுவதான குற்றச்சாட்டுகளுக்கு சீனா பதிலளிக்கவில்லை.

 2006ம் ஆண்டு சீனாவின் முன்னைய அதிபர் கூ ஜிந்தாவோவை சந்திக்க மறுத்த பிரமர் ஹாபர் வர்தக உறவுகளை பற்றி மட்டும் அவருடன் பேச வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க முடியாது என்று அதற்கு விளக்கமளித்தார்.காலம் உருண்டோடியிருக்கின்றது 8 வருடங்களில் மூன்றாவது தடவையாக பிரதமர் சீனாவிற்கு மீண்டும் பயணம் செய்து திரும்பியிருக்கின்றார்.

 ஆனால் இத்தனை வருடங்களின் பின்னரும் சீனாவின் நிலைப்பாட்டில் பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லை ஆனால் நாம் தான் சீனாவை சமாளித்தே ஆகவேண்டிய நிலைக்கு மாறியிருக்கின்றோம் என்பதே பிரதமரின் விஜயம் எமக்கு சொல்லி நிற்கின்ற செய்தியாகும்.

 எனவே நாம் அனுப்பும் பெரிப் பழங்களை சீன டிரகன் பசிதீர உண்ணட்டும்

Comments

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

மீண்டும் வாழ்வோம்….

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring