மீண்டும் அரங்கேறும் மகாபாரதக் காட்சிகள்…
“ தேர்தல்” இன்று இலங்கையில் வாழும் அனேகமானோரின் உரையாடல்களில் பரவிக்கிடக்கும் சொல் இது .”நம்பிக்கையான மாற்றமும்” “வளமான எதிர் காலமும்” குறித்த கனவுகளோடு நீலமும் பச்சையும் போர்திய மனிதர்கள் காத்துக்கிடக்கின்றார்கள். ஆனால் இந்த தேர்தல் அரிதாரங்கள் பூசாமல் எங்கள் உறவுகள் சொந்த மண்ணின் வாழ்விற்கான ஏக்கங்களுக்குள் முகம் புதைத்து நிற்கின்றனர். கொடுத்து சிவந்து போன கரங்களை கொண்ட வன்னி மண்ணின் மைந்தர்கள் இன்று அடுத்தவர்களின் ஒத்தழைப்புக்களை எதிர் பாத்து ஏங்கும் வாழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் இன்னும் சொல்லப்பாட பல சங்கடங்களும் சொல்ல முடியாத சங்கதிகளும் இந்த மக்களை பற்றி நிறைந்து கிடைகின்றது. ஆனால் இவற்றையும் தாண்டி இன்று இவர்களிடமே இரந்து யாசகம் கேட்கின்றனர் அவர்கள். இந்த நிலை பாரதப் போரின் இறுதி தருணங்களை ஏனோ ஞாபாகிக்க வைத்து விடுகின்றது. யுத்த களத்தில் கர்ணனை தனது சாணக்கியத்தால் சரித்து விட்டு பின்பும் அவன் உயிர்காத்து நின்ற அவனின் தர்மத்தை தானமாக பெற்று அவனை கொன்ற கண்ணனை போல் தமிழ் மக்களின் வாக்குகளிற்காக கையேந்தி நிற்கின்றவர்களை பார்க்கத் தோன்றுகின்றது...