நன்றி மயூரன் - எனக்கும் ஒரு விருது வழங்கியமைக்கு
அண்மை நாட்களாக வலைப்பூ உலகில் வலம் வரும் விருதுகளில் ஒன்றான சுவாரசிய பதிவருக்கான விருது எனக்கும் வழங்கப்பட்டுள்ளது.
எனது தலைமுறை ஒலிபரப்பாளர்களில் ஒருவரும் வலைப்பூ பதவிவாளருமான மயூரன் கனகராசாவினால் இந்த விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது
மயூரன்! எனக்கு சுவாரசிய பதிவருக்கான விருதினை வழங்கியமைக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்.
இந்த விருதிற்கு தகுதியானவனா என்ற சந்தேகம் பதிவுலக நண்பர்கள் பலரைப்போலவே எனக்கும் இருக்கின்றது.
இருந்தாலும் உங்கள் விருதை மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்கின்றேன்.
உண்மையில் வலைப்பதிவில் எதனையும் பேசிவிடமுடியும் என்ற போதிலும் இடம் பொருள் ஏவல் அறிந்து அடக்கி வாசிக்க வேண்டியேயுள்ளதால் இன்னும் என்னளவில் நான் முழுமையான பதிவுகளை வழங்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.
அதைவிடவும் தொடர்ச்சியாக பதிவுகளை வழங்கும் பழக்கமும் என்னிடம் கிடையாது.
உண்மையில் சராசரியாக ஒவ்வவொரு நாளும் பதவிவிடும் நண்பர்களை பார்க்க ஆச்சரியமாகவும் பொறமையாகவும் இருக்கின்றது.
ஒரு வாரத்திற்கு ஒரு பதிவு போடவே எனக்கு நாக்கு தள்ளிவிடுகின்றது.
இத்தனைக்கும் தமிழ் தட்டச்சு எழுத்துப்பிழைகளுடன் கூட கொஞ்சம் விரைவாகவும் செய்யக் கூடியவன் என்ற போதிலும் பதிவிடுவதற்கு எனக்கு நேரம் வாய்ப்பதில்லை.
குடந்தஒரு வாரமாக நான் தற்போது இணைந்துள்ள “மீண்டும் வாழ்வோம்” என்ற இடம்பெயர்ந்த மக்களுக்கான தகவல் பரிமாற்ற நிகழ்ச்சி பற்றி ஒரு பதிவினை எழுதி வருகின்றேன்.
12வது வருடத்தில் சூரியன் என்ற எனது முதல் பதவிற்கு அடுத்து மீண்டும் வாழ்வோம் பற்றிய பதிவிடுவதே நோக்கமாக இருந்தது.
எனினும் மயூரனின் விருது உடனடியான பதிவிற்கு என்னை தூண்டி விட்டுள்ளது.
விருதுகள் ஆரோக்கியமானவை விருதுக்கு தகுதியானவான இருந்தால் மேலும் மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கும்.
விருதுக்கு தகுதியற்றவனாயின் அந்த விருதுக்கு தகுதியானவனாகவாவது மாறத் தூண்டும்.
இதில் நான் எந்த வகை என்பது உங்களுக்கு தான் தெரியும்.ஆனாலும் வலையுலகில் எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாக இதனை கருதுகின்றேன்.
எனது சமகால ஒலிபரப்பாளர்கள் என்ற வகையில் எல்லா ஒலிபரப்பாளர்களின் வலைப் பதிவுகளையும் தவறாமல் வாசித்து வருகின்றேன்.அந்த வகையில் எனது துறைசார்ந்த ஒருவரிடம் இருந்து இந்த விருது கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்றது.
மயூரன் எனக்கு வழங்கிய இந்த விருதை நானும் யாருக்காவது வழங்க வேண்டும் விரைவில் எனது விருத்துக்குரியவர்களின் பெயர்களையும் அதற்கான காரணங்களையும் பதிவிடுகின்றேன்.
அதுவரை இந்த விருதினை தந்து ஊக்கப்படுத்திய மயூரனிற்கு மீண்டும் எனது நன்றிகள்.

Comments
http://wisdomblabla.blogspot.com/2009/08/blog-post_08.html
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - 2009 - சில எதிர்பார்ப்புக்கள்......
இப்போது வேலைக்கு போகும் அவசரத்தில்.வருவேன் மீண்டும் சந்திப்போம்.
வாழ்த்துக்களும் கூட ரமணன்.
என் தளத்திற்கு வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளவும்...