Posts

Showing posts from December, 2009

இந்தியா எதிர் சீனா , இலங்கையில் அடுத்த இனிங்ஸ் ஆரம்பம்.

Image
உலகப் பொருளாதாரத்தில் இலாபகரமான வர்தகங்களில் ஆயுத வியாபாரமும் மருந்து பொருட்களும் முதன்மை வகிக்கின்றன. ஓன்று மனித இனத்தை அழிப்பதற்கும் மற்றையது மனித இனத்தை அழிவுகளில் இருந்து காப்பதற்குமான துறைகள் என்பது முரண்நகையானது. இரண்டு துறைகளினதும் தாக்கங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகம் இருப்பதை கடந்த காலங்கள் எமக்கு தெளிவு படுத்தி நிற்கின்றன. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நிலவும் போர்சூழலின் பின்னணியில் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிழல் கரங்கள் எப்போதும் இருந்து வருகின்றன. அதேபோலவே மருந்துப் பொருட்களின் உச்ச பாவனை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையே சார்ந்து இருக்கின்றது. இந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாற முடியாதபடிக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் காண்பித்து வரும் “அதீத அக்கறையின்” பின்னணியில் அவர்களின் ஆயுதங்களும் மருந்துகளும் மறைந்திருப்பது புரிதலுக்குரியது. ஆயுத வர்த்தக போட்டிகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் ஈடுபாடானது எந்த ஒரு நாட்டிலும் மோதலில் ஈடுபடும் இரு தரப்புகளுக்கான வெளி ஆதரவாக விரிவடையும். வெளிப்படையாக மோதல்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து ...

ஊடக மயக்கங்களும் மருந்துகளும்

Image
அண்மை நாட்களில் என் துறை சார்ந்த இரண்டு விடயங்கள் அதிக ஈர்ப்பினை ஏற்படுத்தி விட்டுள்ளன. ஓன்று “இருக்கிறம்: சஞ்சிகையில் வெளியான கட்டுரை மற்றையது வெற்றியில் ஒலிபரப்பான வானொலி ஒன்றிற்கான மடல். இரண்டுமே இலத்திரனியல் ஊடகங்களின் போக்குகள் குறித்த சமகால விமர்சனப் போக்குகளின் அடிப்படையில் நோக்கப்படக் கூடியவை. இவை இரண்டினதும் படைப்பாளிகள் வேறுபட்ட தளங்களில் இருந்து தமது விமர்சனங்களை முன்வைக்க முற்பட்ட போதிலும் இரண்டு விமர்சனங்களினதும் பொதுத் தன்மையானது இலத்திரனியல் ஊடகங்களின் மீதான ஆதங்கங்களையே வெளிப்படுத்தியுள்ளன. “இருக்கிறம”; கட்டுரையில் கட்டுரையாளர் முன்வைத்த பல குற்றச்சாட்டுகளை என்னால் முற்றாக நிராகரிக்க முடியவில்லை ஆனால் அந்த கட்டுரை மீதான ஊடகத்துறை நண்பர்களின் முக்கிய எதிர்பிற்கு காரணம் அந்த கட்டுரையாளர் பற்றியதாகவே எழுகின்றது. அவர் கூறிய விடயங்களை தவிர்த்து அவர் யார் ? அவரின் பின்னணி என்ன ? அவர் இந்த கட்டுரையை எழுத காரணம் என்ன என்பது போன்ற வாதங்கள் அதிகம் முன்வைக்கப்படுகின்றது. இரு தடவைகள் அந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தேன் நான் கடந்த 10 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகத் துறை ச...