சத்தம் இன்றி ஒரு புரட்சி – பரியோவான் கல்லூரி சாதனைகளின் சிகரத்தில்
இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தம் ஏற்படுத்தி நிற்கும் காயங்கள் ஆறுவதற்கு காலங்கள் பலவாகும். யுத்தத்தை நேரடியாக தரிசித்த சுமார் மூன்று இலட்சம் உறவுகளிடம் சொல்வதற்கு கதைகள் ஏராளம் இருக்கும் அவை காலத்தின் காதுகளில் எப்போது சொல்லி வைக்கப்படும் என்பது உங்களை போலவே எனக்கும் தெரியாதது தான்… ஆனால் இழப்புகளில் இருந்து மீண்டெழும் மந்திர வித்தை தெரிந்தவர்கள் நாங்கள்.எங்களை சுற்றியுள்ள தடைகள் தகரும் போது நாங்கள் இழந்த வாழ்வை மீண்டும் பெறமுடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைகள் எங்களிடம் நிறையே உண்டு. அதுவரைக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக வேண்டியது எங்களின் கட்டாய கடமை. இது அது போன்ற ஒரு காயத்திற்கு மருந்தாகும் முயற்ச்சி பற்றியதான கதை தான் இது. யாழ்ப்பாணத்தின் கல்வி சமூகத்தின் வளர்ச்சியல் தவிர்க்க முயடிhத அங்கங்களில் ஒன்று புனித பரியோவான் கல்லூரி. யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் பாடசாலைகளில் மிக முக்கியமானது இந்த கல்லூரி. தேசங்கள் தாண்டியும் தமிழர்களின் திறமைகள் பரவும் வழி வகை செய்து நிறகின்றது இந்த பாடசாலை. ஆளுமை மிக்க மனிதர்களை உற்பத்தி செய்தும் ஒரு உற்பத்தி சாலை எ...