நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?
நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரசித்தமான உரையாடலின் வலிமிகு வரிகள் இவை. இந்த வரிகளின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையும் அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் வாழ்கை குறித்த புரிதலின் அடிப்படையானவை. உண்மையில் ஒவ்வொரு மனிதனின் உள்ளும் நல்லவனும் கெட்டவனும் வெட்டிப் பிரிக்க முடியாத இரட்டையர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எந்த ஒரு மனிதனும் நான் நல்லவன் என்று மார்தட்டிக் கொள்ள முடியாதபடிக்கு செவியில் அறையும் மறுமுகம் ஒன்று அவனுக்குள் இருக்கின்றது என்பது தான் யதார்தம். அவ்வாறு என்னால் அல்லது செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் முதலில் மன்னிப்பு கோரிவிடுகின்றேன். என்னளவில் நான் நல்லவனாகவே உணர்கிறேன். ஆனால் எனது நடவடிக்கைகள் சிலரை காயப்படுத்தியிருக்கக் கூடும் என்பதை காலமாற்றங்கள் புரிய வைத்து விடுகின்றன. அது தற்செயலானதாய் அல்லது பின் விளைவுகள் குறித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் அற்ற தன்மையினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளினால் ஏற்ட்டிருக்கலாம். அல்லது திட்டமிட்டு வேண்டும் என்றே காயப்படுத்தும் நோக்கம் கொண்டதான செயலின் விளைவாக இருந்திருக்கலாம் எது எப்ப...