தமிழ் மரபுரிமைத் திங்கள் 2013
புதிய தேசத்தில் புதிய வாழ்கைச் சூழலில் இருந்து எழுத்தப்படும் முதலாவது பதிவு இது. 2011ம் ஆண்டு ஓக்ரோபர் மாதம் கனடாவிற்கு புலம் பெயர்ந்த பின்னர் இங்கிருக்கும் வாழ்கை முறைக்குள் வாழப் பழகுவதற்கான போராட்டங்களோடு ஒரு வருடம் கடந்தோடிப் போய்விட்டுள்ளது. இங்கும் எழுதுவதற்கும் பகிர்வதற்கும் நிறையவே விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கானநேரத்தை தேடி அடைவதென்பது சிரமமளிக்கும் ஒன்றாகவே இருந்த வருகின்றது. இந்த வருடம் சமூக வலைத்தளங்களில் அதிகம் இயங்குவதற்கு தீர்மானித்திருக்கிறேன்.அது சாத்தியமாகின்றதா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த பதிவின் நோக்கம் தமிழர்களின் தலைமாதம் குறித்த ஒரு சிறப்பானதும் முக்கியத்துவம் மிக்கதுமான வேலைத் திட்டம் தொடர்பான சில விடயங்களை பகிர்வதாகவே இருக்கின்றது. நான் கடமையாற்றி வரும் வணக்கம் எப்.எம் மற்றும் தமிழ் வண் தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடக பங்களிப்போடு இம்முறை ரொரன்ரோவில் தமிழர்களின் பாரம்பரிய மாதம் தொடர்பான வேலைத் திட்டங்கள் "தமிழ் மரபுரிமைத் திங்கள்" என்ற தொனிப் பொருளுடன் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மீதும் தமிழரின் பாரம்பர...