கூட்டு ஒப்பந்தம் - மலை முகடுகளில் மரித்துப் போகும் மனிதம்
நேற்று ( 06-06-2011 ) பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தனமை குறித்த செய்திகள் ஊடகங்களின் பிரதான இடத்தை பிடித்திருந்தன. இனிவரும் இரண்டு வருடத்திற்கு அப்பாவித் தொழிலாளர்கள் வாய் திறக்க முடியாத படிக்கு ஒப்பந்த பத்திரங்களை தொழிற்சங்க எஜமானவர்கள் அவர்களின் வாய்களில் திணித்து விட்டனர். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தொழிலாளர்களை பிரதிநிதித்தவப்படுத்தும் குறிப்பிட்ட சில தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர். மூடிய அறைகளுக்குள் நடக்கும் இந்த ஒப்பந்த பேரத்தில் பேசப்படும் விடயங்கள் முழுமையாக அறியக்கிடைக்காது. இறுதியில் இத்தனை ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற ஒற்றை வரிச் செய்தி மட்டுமே வெளியாகும். இம்முறையும் ஆகக்குறைந்தது 500 ரூபா அடிப்படைச் சமபளம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வழமைபோல மலை உச்சிகளில் மலைச் சரிவுகளில் விழுந்து இறந்து போய்விட்டன. அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவில் இருந்து 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 380 ரூபா என்ற இலக்கை அடைந்துள்ளது அதாவது வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின்...