Posts

Showing posts from August, 2009

நன்றி மயூரன் - எனக்கும் ஒரு விருது வழங்கியமைக்கு

Image
அண்மை நாட்களாக வலைப்பூ உலகில் வலம் வரும் விருதுகளில் ஒன்றான சுவாரசிய பதிவருக்கான விருது எனக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனது தலைமுறை ஒலிபரப்பாளர்களில் ஒருவரும் வலைப்பூ பதவிவாளருமான மயூரன் கனகராசாவினால் இந்த விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது மயூரன்! எனக்கு சுவாரசிய பதிவருக்கான விருதினை வழங்கியமைக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள். இந்த விருதிற்கு தகுதியானவனா என்ற சந்தேகம் பதிவுலக நண்பர்கள் பலரைப்போலவே எனக்கும் இருக்கின்றது. இருந்தாலும் உங்கள் விருதை மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்கின்றேன். உண்மையில் வலைப்பதிவில் எதனையும் பேசிவிடமுடியும் என்ற போதிலும் இடம் பொருள் ஏவல் அறிந்து அடக்கி வாசிக்க வேண்டியேயுள்ளதால் இன்னும் என்னளவில் நான் முழுமையான பதிவுகளை வழங்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அதைவிடவும் தொடர்ச்சியாக பதிவுகளை வழங்கும் பழக்கமும் என்னிடம் கிடையாது. உண்மையில் சராசரியாக ஒவ்வவொரு நாளும் பதவிவிடும் நண்பர்களை பார்க்க ஆச்சரியமாகவும் பொறமையாகவும் இருக்கின்றது. ஒரு வாரத்திற்கு ஒரு பதிவு போடவே எனக்கு நாக்கு தள்ளிவிடுகின்றது. இத்தனைக்கும் தமிழ் தட்டச்சு எழுத்துப்பிழைகளுடன் கூட கொஞ்சம் விரைவாகவும் செய்யக்...