உலகை உலுக்கும் இடப்பெயர்வுகள் இலங்கை மீதான கவனம் நீடிக்குமா?
உலகில் 42 மில்லியன் மக்கள் வேரோடி விழுதெறிந்த தமது தாய் மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் சுமார் 42 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தாங்கள் விழுதெறிந்து வாழ்ந்துவந்த சொந்த மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இவர்களில் 26 மில்லியன் பேர் தமது சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஏனைய 16 மில்லியன் மக்களும் தமது நாடுகளிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தவர்களை உயிர்ப்பிக்கவும், இறப்பினைத் தள்ளிவைக்கவும் விஞ்ஞானம் வழி தேடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், உலக அளவில் பல நாடுகளிலும் இந்த மனிதப் பேரவலம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. அதிகரித்துவரும் இந்த இடம்பெயர்வுப் போக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. எந்தவொரு தனிப்பட்ட அமைப்பும் உலக அளவில் இவ்வளவு தொகையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவருக்குமான மனிதாபிமானப் பணிகளை தனித்து முன்னெடுக்க முடியாது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள...