காலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்

நெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.
உலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.
அவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.

வடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார்.

பொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என குற்றஞ்சாட்டப்பட்டிள்ளது. இதற்கு அனுமதி வழங்கிய பொஸ்னிய சேர்பிய அரசியல் தலைவரான ரடோவன் கரடிச் மற்றும் மறைமுகமான இதனை ஊக்குவித்த சேர்பிய முன்னாள் ஜனாதிபதி ஸ்லபோடன் மிலோசவிச் ஆகியோர் ஏற்கனவே கைதாகி சர்வதேச குற்றவியல் நீதிமன்ற த்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மெலடிச்சின் கைது இடம்பெற்றுள்ளது.

நெடுந்தொடர் ஒன்றின் ஒரு அத்தியாயமாக மெலடிச்சை கருத முடியும் ஆனால் பல குழப்பகரமான முடிச்சுகள் கொண்ட பொஸ்னியாவின் கதையை முழுமையாக புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்ச்சி தான் இந்த கட்டுரை தொடர்.

பொஸ்னியா என்பது ஐரோப்பாவில் மிக மோசமான இனப் போராட்டத்தை தொடர்ச்சியாக சந்த்தித்து வரும் ஒரு நாடு.இதன் பிரதான இனக்குழுமங்கள் மூன்று. அவை மூன்றும் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கான போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றன.

பெரம்பான்மையினராக இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லீம்களும் (40 %) சிறுபான்மையிராக கிரேக்க பின்னணி கொண்ட சேர்பியர்கள் (32%) மற்றும் க்ரோட்கள் (18%) எனப்படும் ரோமன் கத்தோலிக்கர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.1918ம் ஆண்டு முதலாவது உலக மகா யுதத்தை அடுத்து யுகோஸ்லாவியா என்ற கூட்டு அமைக்கப்பட்டது. அதில் பொஸ்னியா, மொன்ரிநிக்ரோ, ஸ்லோவேனியா, க்ரோஷியா, மாசிடோனியா ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன.


1946ல் யுகோஸ்லாவியா தனக்கான அரசியலமைப்பை உருவாக்கியது. மார்ஷல் ரிற்றோ என்பவர் அதனை கம்யுனிசத்தின் பாதையில் பயணிப்பதற்கான பலமான நாடாக மாற்றும் முனைப்புகளை மேற்கொண்டார்.மார்ஷல் ரிற்றோவின் தலைமையில் தமக்கான விடியல் கிடைத்துவிடும் என்று அந்த மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.ஆனாலும் ரிற்றோவின் மறைவை தொடர்ந்து நிலைமை தலைகீழாக மாறியது.கம்யுனிச கையிறுகளால் இறுக பிணைக்கப்பட்டிருந்த யுகோஸ்லோவியா என்ற கூட்டமைப்பு உடைந்து சிதறியது.



1991ல் க்ரோக்ஷியா மற்றும் ஸ்லோவேனியா ஆகியன தம்மை சுதந்திர நாடுகனாக அறிவித்தன. அதனை தொடர்ந்து பொஸ்னியாவும் சுதந்திர பிரகடனம் செய்ய எத்தனித்து.அதன் போது தான் பிரச்சினையும் வெடித்தது.

பொஸ்னியா சோ்பியாவுடன் இணைந்திருப்பதே தமக்கு பாதுகாப்பானது என்று பொஸ்னிய சேர்பியர்கள் கருதினார்கள் அதனால் பொஸ்னியாவின் தனி நாட்டு பிரிவினைக்கு அவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படத்த முற்பட்டனர்.எனினும் பொஸ்னிய முஸ்லீம்கள் மற்றும் க்ரோஷியர்களின் பெரும்பான்மை ஆதரவோடு பொஙஸ்னியா தனிநாட்டு பிரகடனம் செய்து கொண்டது.

சிறுபான்மையிராக இருந்த போதிலும் அயல் நாடானா சேர்பியாவின் ஆதரவுடன் பொஸ்னிய சேர்பியர்கள் முங்லீம்கள் மீதும் குரோஷியர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர்
சேர்பியாவின் முன்னாள் ஜானதிபதியான ஸ்லபோடன் மிலோசவிச் இந்த தாக்குதல்களை ஊக்கப்படுத்தினார்.

பொஸ்னியாவில் இருந்து முஸ்லீம்களையும் குரேஷியர்களையும் இனச் சுத்தீகரிப்பு செய்யும் நோக்கில் சேர்பியர்கள் கடும் தாக்குதல்களை நடத்தினார்கள். நிலப்பரப்புகளை கைப்பற்றுவதை விடவும் இன அழிப்பினையே அவர்கள் பிரதான நோக்கமாக கொண்டு செயல்பட்டமைக்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இரண்டு மாதங்களில் பொஸ்னியாவின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பகுதியயை சேர்பியர்கள் தம்வசப்படுத்தினார்கள்.

இதேவேளை குரோஷியாவின் ஆதரவுடன் பொஸ்னியாவில் இருந்து ஐந்தில் ஒரு பகுதி நிலத்தை குரோக்ஷியர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.ஐக்கிய நாடுகள் சபை " வழமை போலவே" இந்த விடயத்திலும் தனது கையாலாகத்தனத்தினால் சரியான தீர்வினை வழங்க முடியாமல் தத்தளித்து. இறுதியில் உலகக் காவல்காரனான அமெரிக்காவிடம் பொஸ்னிய விவகாரம் கொண்டு செல்லப்பட்டது.

பிரச்சினைப்படுபவர்களை விடவும் அதற்கு தூண்டுகோலக இருப்பவர்களுடன் பேசுவதும் ஒப்பந்தம் போடுவதும் தீர்வாகும் என்று அமெரிக்கா கருதியது. அதனால் பொஸ்னியாவின் தலைவர் அலிஜா சேர்பிய ஜனாதிபதி ஸ்லபோடன் மிலோசவிச் மற்றும் க்ரோக்ஷிய ஜனாதிபதி டுட்ஜ்மென் ஆகியார் அமெரிக்க அனுசரணையில் டேடனில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்தையில் கலந்து கொண்டனர்.

பொஸ்னியாவின் 49 சதவீதத்தை சேர்பியர்களும் 51 சதவீதத்தை முஸ்லீம்கள்,க்ரோஷியர்கள் மற்றும் ஏனைய பிரிவினருக்கும் பிரித்து தனியலகுககளாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.
பொஸ்னியா என்ற ஒன்று பட்ட நாட்டிற்குள் இரண்டு தனியான குடியரசுகளாக அவை செயற்படும் என தீர்மானிக்கப்பட்டது.எனினும் எதனை எவ்வாறு பிரிப்பது என்பது தொடர்பிலும் பிரச்சினைகள் வெடித்தன.

இத்தனை சிக்கல்களையும் தாண்டி அந்த நாட்டில் அமைதியை கொண்டு வருவதற்கான ஐநா அமைதிப்படையும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.பொஸ்னிய யுத்தத்தில் மிக முக்கியமான யுத்தக் குற்றமாக கருதப்படும் ஸ்ரெப்னிகா படுகொலைகள் ஐநா மீதான குற்றச்சாட்டுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.அப்பாவி முஸ்லீம் மக்களை பாதுகாப்பதற்கான ஐநா அறிவித்த ஒரு இடம் தான் ஸ்ரெப்னிகா நகரம்.அங்கு ஐநாவின் பாதுகாப்பு படைகள் நிலை கொண்டிருந்தன.

பொஸ்னியா முஸ்லீம் பகுதிகளை ஆக்கிரமதித்தவாறு முன்னேறிய பொஸ்னிய சேர்பிய படைகள் குறித்த நகரை அண்மித்த வேளை அங்கு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்த ஐநா அமைதிப்படை அந்த மக்களை கைவிட்டு விலகியது. இது முன்கூட்டியே இணக்கம் காணப்பட்டமைக்கு அமைவாக மேற்கொள்ளபடப்ட படை விலகல் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.ஐநா படைகளின் வெளியேற்றத்தை அடுத்த அங்கு நுழைந்த மெலடிச்சின் படைகாள் அங்கிருந்த முஸ்லீம்களில் சுமார் 7500 பேரை ஒரே தடவையில் சுட்டுக் கொன்றனர். இதனை தற்போது சேர்பிய அதிகாரிகள் ஏற்றுக் கொண்டும் உள்ளனர்
ஐநாவின் அமைதிப்படையாக ஸ்ரெப்னிகா நிலை கொண்டிருந்தவர்கள் நெதர்லாந்து இராணுவத்தினர் ஆனால் அவர்கள் தெவரை தமது பின்வாங்கலுக்கான காரணம் குறி்த்தோ அல்லது அங்கு இடம்பெற்ற இன அழிப்பு குறித்தோ இதுவரை வாய் திறக்கவில்லை.

பி. கு 01 : பொஸ்னிய படுகொலைகளின் நேரடிக் குற்றவாளியான மெலடிச் மீதான விசாரணை நெதர்லாந்தில் நடைபெறுகின்றது

நன்றி : சக்தி செய்திகள்
http://www.shakthienews.com/index.php?option=com_content&view=article&id=5156

Comments

Jana said…
வணக்கம் ரமணன்.
எப்படியோ உங்கள் மீள் வரவுற்கு மிகப்பெரும் சந்தோசப்பட்டுக்கொள்பவன் நான்.
உண்மையில் உலக அரங்குகள் சம்பந்தமான ஆழமான ஒரு பார்வை இன்று தமிழ் வாசகர்களுக்கு கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கின்றது என்பதே எனது நீண்டநாள் ஆதங்கம்.
இவற்றை உடனுக்குடன் ஆங்கிலம் தெரிந்தவர்கள், சர்வதேச முதல்தர செய்தி ஸ்தாபனங்கள் மூலமாகவும், இணையங்கள், ஆங்கில சஞ்சிகைகள் மூலமாகவும் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் தமிழிலே இவை எட்டாக்கனிகளாகவே உள்ளன. எமது நாட்டு பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால் வெளிநாட்டு செய்திகளுக்கும், அரசியல் நகர்வுகளுக்கும் கொடுக்கும் இடம் விளையாட்டு செய்திகளைவிட குறைவுதான். அப்படி வரும் செய்திகளும் இந்திய தமிழ் பத்திரிகைகளை சார்ந்ததாகவே உள்ளன.
இந்த செய்தி அறிதலுக்கு தமிழ் வாசகர்களிடம் ஒரு வரட்சி நிலைமையே காணப்படுகின்றது.

இந்த நிலை இனிவரும் காலங்களில் மாறவேண்டும். அவற்றுக்கு உங்கள்போன்ற வலைப்பதிவர்கள் இப்படியான பதிவுகள் அதிகம் வர உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே என் அவா..
மீண்டும் நன்றிகளும், வாழ்த்துக்களும் ரமணன்.
Ramanan said…
நன்றி ஜனா.

வேலைப்பளு காரணமாக மட்டுமே இதுவரை பதிவிடவில்லை என்று கூறமாட்டேன்.

இங்கு காணப்படும் சில விரும்பதாக நடைமுறைகளால் பதிவிடாமல் காத்திருந்தேன்

உங்கள் மூன்றாம் ஆண்டு பூர்த்தி தொடர்பான பதிவும் அது ஏற்படுத்திய அதிர்வும் பதிவுலகம் நல்ல திசைக்கு நகரும் நம்பிக்கையினை தந்துள்ளன.

வாக்குகளும் பின்னூட்டங்களும் இன்றி பதிவுகள் உரிய வாசகர்களை சென்றடைய முடியாத துர்பாக்கிய நிலை தொடர்ந்தாலும்

மாற்றங்கள் கொண்டு வரும் எதிர் காலம் இதற்கும் ஒரு தீர்வினை வழங்கும் என்று நம்புகி்ன்றேன்.

தொடர்சியாக எழுதுவேன் உங்களைப் போன்றவர்களின் ஆதரவு தொடரும் என்ற கனவுகளுடன்.
Ramesh said…
வணக்கம்
மீண்டெழுந்த வருகையை வரவேற்கிறேன்.
நான் எதிர்பார்த்துக்கொண்ட விடயங்களுக்கு இப்பதிவு திருப்தியளிக்கப்போகிறது..
நன்றியும் வணக்கமும். தொடர்ந்து அசத்துங்கள். நீங்கள் எழுதுவது உங்களுக்காக அல்ல எங்களுக்காக...
Unknown said…
என்ன ஒரு ஆழமான பார்வை??
நிறைய அறிவுடன் எழுதி இருக்கீங்க...
வாழ்த்துக்கள் தொடருங்க..
பகிர்ந்த ஜனா பாஸ்க்கு நன்றிகள்
அண்ணா எங்களைபோல சற்று இளையவர்களுக்கு இந்த பிரச்சனைகள் தொடர்பாக பட்டும் படாமலும் அறிவு மட்டுமே இருந்திருந்தது! உங்களால் பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன! நன்றிகள்.
sinmajan said…
நீண்டதொரு நல்ல பதிவு..தொடர்ந்து எழுதிக் கலக்குங்கள்
Ramanan said…
ரமேஸ். மைந்தன் சிவா, கார்த்தி, சின்மயன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தொடர்ந்தும் எழுதுவதற்கு முய்ற்சிக்கின்றேன்
Anonymous said…
சிறந்ததொரு பதிவு Sir.தொடர்ந்தும் உங்களிடமிருந்து பல இதுபோன்ற பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்.

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

மீண்டும் வாழ்வோம்….

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring