சூர்யோதயம் ..எண்ணங்களும் ஏக்கங்களும்

நட்சத்திர பதிவராக என்னை தெரிவு செய்த யாழ் தேவி குழுவினருக்கு முதலில் நன்றிகள்.

நேற்று இரவு யாழ் தேவிகட்கு உலவச் சென்ற போது தான் நான் நட்சத்திர பதிவரான விடயமே தெரியவந்தது.

அதன் பின்னர் தான் மின்னஞ்சல் முகவரி தேடி திறந்த போது யாழ் தேவியினர் அனுப்பி வைத்த மின்னஞ்சல் காணக்கிடைத்தது.

தினமும் ஏதாவது எழுத வேண்டும் என்ற அன்பு கட்டளை கூட அதன் பின்னர் தான் எனக்கு தெரியவந்தது அதனால் கடந்த இரு தினங்களாக நான் எதனையும் எழுதவில்லை பிழை பொறுத்தருள்க.

சூரியோதயம்… (Sunshine)

நண்பர் வியாசா கல்யாணசுந்தரம் கடந்த வருடம் ஆரம்பித்த ஒரு திட்டம் இது.
கொழும்பில் வாழும் வசதி குறைந்த மாணவர்கள் சிலரை கல்விப் பொதுத் தராதர சாதரண தரப்பரீட்சைக்கு தயார் படுத்துவது தான் இந்த திட்டத்தின் முதல் படி. கடந்த வருடம் பல்வேறு சவால்களை தாண்டி அந்த திட்டம் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது.

மிகவும் இலகுவான ஒரு திட்டம் இது வருமானம் குறைந்த குடும்பங்களில் இருந்து கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக கல்வியை வழங்குவதன் மூலம் அவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கச் செய்வது தான் இதன் முதன்மை நோக்கம்.

இந்த வருடம் இந்த திட்டத்திற்கு 60 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் இவர்களுக்கான பிரத்தியோக வகுப்புகள் இலவசமாக மட்டக்குளியவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாலை நேர வகுப்பாக நடத்தப்படுகின்றன.

இங்கு தகதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலமாக 6 பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாதாந்தம் பரீட்சைகள் நடத்தப்பட்டு அவர்களின் முன்னேற்றங்கள் குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தில் கொடையாளர்காக இணைந்து கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரு மாணவனை பொறுப்பேற்க வேண்டும் அந்த மாணவனின் முழுமையான விபரங்கள் அடங்கிய கோவை ஒவ்வொரு கொடையாளளருக்கும் வழங்கப்படும்.
அத்தோடு மாதா மாதம் நடத்தப்டும் பரீட்சை பெறுபேற்று பிரதிகள் மற்றும் பாடசாலையில் நடத்தப்படும் தவணைப் பரீட்சை பெறுபேறுகளும் குறிப்பிட்ட நன்கோடையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் அதன் மூலம் அந்த குழைந்தையின் கல்வி வளர்சி குறித்து அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
அதேவேளை அவர்கள் வழங்கும் பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்ற விடயங்களும் மாதா மாதம் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்
இந்த திட்டத்தை வடக்கு கிழக்கிற்கும் மலையகத்திற்கும் விரிவு படுத்துவதற்கான முயற்சிகளில் நாங்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.
நடைமுறைச் சிக்கல்கள் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் மேற்பார்வையிடல் போன்ற பல்வேறு காரணிகளால் கடந்த வருடம் இந்த திட்டத்தை கொழும்பிற்குள் மட்டுப்படுத்த வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது.
ஆனால் தற்போதைய நிலையில் வடக்கு கிழக்கிற்கும் மலையகத்திற்கும் இந்த திட்டத்தை கொண்டு செல்வதில் தடைகள் இருப்பதாக தெரியவில்லை.
வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தமக்கு தேவையான மேலதிக கற்றல் உதவிகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர்.இவர்களுக்கு சரியான ஒத்துழைப்புகளை வழங்கினால் சிறந்த பெறுபேறுகளை பெறக் கூடியவர்களாக அவர்கள் மாறுவார்கள்.
இலங்கையின் கல்வி முறையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் என்பது வாழவை தீர்மானிக்கும் ஒரு பரீட்சையாக கொள்ளப்படுகின்றது.
அந்த தடையை தாண்டினால் தான் உயர் கல்வி குறித்து சிந்திக்க முடியும் எனவே முடிந்த அளவில் கூடுதலானவர்களை இந்த பரீட்சையில் சித்தியடைய வைப்பதும் எமது எதிர்கால சந்ததியினரின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு துரும்பாக இந்த திட்டம் அமைய வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பு.
இந்த வருடம் கல்விப் பொதுத் தரதாரப் பரீட்சைக்கு தோற்றும்ட மாணவா்களின் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்றவர்கள் உயர் தரம் பயில்வதற்கான உதவிகளை வழங்குவதும் பல்கலைக்கழகத்திற்கு அவர்கள் தெரிவாகும் பட்சத்தில் பல்கலைக்கழக கல்வியை பூர்தி செய்யும் வரை அவர்களுக்கு உதவி வழங்குவதும் இந்த திட்டத்தின் அடுத்த கட்டங்கள்.

ஓரு குழந்தையின் கல்வி வளர்ச்சிக்கு மாதாந்தம் 1000 ரூபா செலவிட தயாராக இருக்கும் நல்ல உள்ளங்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

விரைவில் வடக்கு கிழக்கு மலையகம் என விரியும் இந்த திட்டத்திற்கு நிதிப்பங்களிப்பு மட்டுமன்றி ஏனைய மனித வள உதவிகளை கூட நாங்கள் எதிர் பார்கின்றோம் ஆர்வமும் அக்கறையும் கொண்ட நல்ல உள்ளங்களின் ஒ்த்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எங்கள் பயணம் தொடர்கின்றது.

Comments

ARV Loshan said…
வாழ்த்துக்கள் ரமணன். இப்படியாவது உங்கள் பதிவுகள் பல வரட்டும். :)

வியாசா முன்கொண்டு நடத்துகின்ற சூரியோதயம் வெற்றிபெறட்டும். அவரது நல்ல மனதுக்கும் அந்த சேவையை வெளிப்படுத்தியுள்ள உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
vicram said…
மிக விரைவில் நாடெங்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வாழ்த்துக்கள் இத்திட்டத்தில் எவ்வாறு இணைத்துகொள்வது பற்றி அறியத்தரவும்.vicram81@hotmailil.com

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

மீண்டும் வாழ்வோம்….

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring