ஒரு யானை... ஒரு பாடம்... ஒரு கதை...



வருடம் பிறந்த போது பதிவிட்ட பின்னர் இந்த மாத இறுதியில் மற்றுமொரு பதிவிடும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

வழமை போல் தான் நேரமுகாமைத்துவ சிக்கல் தான் பதிவின் பக்கம் அண்டவிடாமல் செய்து வருகின்றது.

நேற்று சர்வதேச வாத்தகம் தொடர்பான வகுப்பில் பேராசிரியர் ஒருவர் கூறிய கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

அமெரிக்காவின் பிரபலமான முகாமைத்துவ கற்கை பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹவார்ட் பல்கலைக் கழகத்தின் புதுமுக மாணவர்களுக்கான ஆரம்ப நாள் வகுப்பு அது பல்வேறு நாடுகளில் இருந்தும் புலமைப்பரீசில் பெற்று வந்த மாணவர்களால் நிறைந்திருந்தது

முதல் நாள் மாணவர்களின் ஆளுமைகளை அறியும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு அம்சமாக பேராசிரியர் ஒருவர் யானை பற்றி எழுதுமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் எழுதிய ஆய்வுகள் பற்றிய சுருக்க குறிப்புகள் இனி..

அமெரிக்க மாணவன்
யானையின் பொருளாதார பயன்கள் அதன் மூலம் எப்படி அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்,அமெரிக்க பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்கு யானையை எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பது பற்றி ஒரு ஆய்வினை எழுதி முடித்தான்.

பிரித்தானிய மாணவன்
யானையின் குண நலன்கள் குறித்தும், அது வித்தியாசமான சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ளும்,அதனது நடத்தை கோலங்கள் எப்படி பட்டவை என்பது பற்றி விபரித்து ஒரு கட்டுறை எழுதினான்

பிரான்ஸ் மாணவன்
யானையின் பாலியல் செயல்பாடுகள் அதன் விருப்பு வெறுப்புகள் போன்ற விடயங்களை ஆழமாக ஆராய்ந்து எழுதினான்.மாற்று பாலனத்தை கவர யானை எப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடும்,தனது அன்பை அது எப்படி வெளிப்படுத்தும் என்பது பற்றியது அவனது ஆய்வு

ஜேர்மனிய மாணவன்
யானை மூலமாக பெறப்படக் கூடிய கைத்ததொழில் துறை பயன்பாடுகள் பற்றி தனது ஆய்வினை மேற்கொண்டான்.ஜேர்மனிய கைத்தொழில் துறையின் மேம்பாட்டில் யானையின் பயன்பாடு பற்றிய வரலாற்று ஆதாரங்களை அவன் தனது ஆய்வில் வெளிப்படுத்தியிருந்தான்.

ஜப்பானிய மாணவன்
யானையை எப்படி சிறியதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் உருவாக்க முடியும் என்றும்,குறைந்த உணவை வழங்கி கூடுதல் பயனை பெறக்க கூடியதாக யானையை வடிவமைப்பதற்கான ஏது நிலைகள் பற்றி ஆய்வு செய்திருந்தான்.பொன்சாய் தாவரங்கள் போல் யானையை வீட்டில் வளர்க்கக் கூடிய புனைக் குட்டி நாய்க் குட்டி அளவில் படைக்க முடியும் என்பது அவனின் வாதம்.

இந்திய மாணவன்
மதங்களில் யானை என்ற தலைப்பில் தனது ஆய்வினை மேற்கொண்டான்,இந்திய மதங்களில் யானைக்கு வழங்கப்பட்டுள்ள இடம்,வரலாற்றில் யானைக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருந்த தொடர்புகள் என அவனது ஆய்வு அமைந்திருந்தது

இலங்கை மாணவன்
ஒரு யானையை எப்படி திருடலாம் என்பது பற்றி எழுதியிருந்தான்,எங்கள் ஊரில் கிணற்றையே களவாடியவர்கள் இருக்கின்றார்கள் யானை எல்லாம் எமக்கு எம்மாத்திரம் என்பது நம்மாளின் கருத்து.

இந்த கதையை சொல்லி முடித்த பின்னர் எமது பேராசிரியர் சொன்ன ஒரு தகவல் தான் உச்சம் எமது நாட்டின் அதிகாரமவருக்கு அடுத்த நிலையில் இருக்கின்றவர் (இப்போதும் அப்பபோதும்) யானை திருடிய குடும்பத்தைச் சேர்ந்தவராம் அவரது மூதாதையர்கள் யானை திருடிகள் என்றே அழைக்கப்பட்டனராம்..இப்ப அவர் அதிகாரத்திற்கு வந்துவிட்டதால் பராம்பரியங்களை மறைக்க முடியாது தானே என்றும் சொன்னார்.

( பிரதான எதிர்கட்சியின் சின்னம் யானை என்பதும் அந்த கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து விட்டார்கள் என்பதும் தற்செயலான விடயம்.)

Comments

:-)

கடைசிப் பந்தியில் கூறிய தகவல் புதியது..:-)
Prapa said…
கடைசியில "எஸ்கேப்" ஆனா போல இருக்கு . நன்றி ரமணன் அண்ணா !
Mathu said…
:) Interesting!! Hehe!
ஒரு ஊடகத்துறை மாணவன் எழுதியிருந்தால் - இணையத்தளத்தில் யானை பற்றி உள்ள அனைத்தையும் சேகரித்துத் தொகுத்து எழுதிவிட்டு, இந்தத் தகவல்கள் அனைத்தையும் முதன்முதலில் தந்தது தானே என்று முடித்திருப்பான்.. ஹி... ஹி.... அந்தநாள் ஞாபகம்.
Anonymous said…
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்
நல்ல கதை.

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

மீண்டும் வாழ்வோம்….

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring