யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்... !
யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம் என்றார் மாவோ. தமிழர்கள் இன்று சந்தித்திருப்பதும் ஒரு யுத்தம் தான். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த அரசியல் யுத்தத்தை எதிர் கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்குள் நாம் தள்ளப்பட்டு கிடக்கின்றோம். போரில் உங்களை ஒரு முறை மட்டுமே கொல்ல முடியும். அரசியலில் நீங்கள் பலமுறை கொல்லப்படுவீர்கள் என்று வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை சொல்லியிருக்கின்றார். தமிழ் மக்களின் தற்போதைய நிலையும் அது தான் 2009 ஆயுதப் போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் நாம் பல தடவைகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பில் இருப்பது தான் 13வது அரசியலமைப்பு அதனை நடைமுறைப்படுத்துவது என்பது அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் கடமை. ஆனால் தற்போதுள்ள நிலையில் 13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதே மிகப்பெரிய சவால் என்றும் அந்த சாவலை எதிர் கொண்டு தாம் அதனை நிறைவேற்றி தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசகைளை நிறைவேற்றி வைக்கப் பாடுபடுவதாக மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடகம் போடுகின்றார். இது நாடகம் தான் என்று தெரிந்தும் ந