இசையின் சங்கமம்...Tunes of Passion
தேசம் தாண்டுதல் என்பது மனிதர்களை பொறுத்தவரை வலி சுமக்கின்ற நிகழ்வாகவே இருக்கும். ஓடி விளையாடி கூடிக் களித்த மண்ணில் இருந்தும் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் என அத்தனையும் தொலைத்து விட்டு முற்றிலும்; அந்நியமான வாழ்க்கைச் சூழலுக்குள் பிடுங்கி வீசப்படுதல் என்பதும் கூட ஒரு வகை மரணம் தான். எத்தனை எத்தனை வசதிகள் வாய்ப்புகள், பாதுகாப்பு,கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் இன்னும் இன்னும் பலவாய் விரியும்; காரணிகளை புலம்பெயர் தேசங்களில் அனுபவிக்க முடிகின்ற போதிலும் தாய் மண்ணின் மணம் வீசும் காற்றினை தொலைத்தல் என்பது கொடுமையானது. அவ்வாறாக இழத்தலில் உயிர்க்கும் புதுவாழ்வில் தாய் மண்ணில் நாம் வாழ்ந்த நினைவுகளையும் தாய் மண் தந்து போன சுகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டு வருவது இங்கும் அழிந்து போகாமல் தொடரும் எங்கள் கலைகளும் பாராம்பரியங்களும் தான். இங்கு பிறந்து வாழும் அடுத்த தலைமுறை தமிழ் பற்றிய அறிதலையும் புரிதலையும் கொண்டிருப்பதற்கு காரணம் இங்குள்ள ஊடகங்களினதும் கலைஞர்களினதும் அர்பணிப்புடனான பங்களிப்பு என்பது மிபை;படுத்தப்படாத உண்மை. தமிழின் எதிர்கால இருப்பிற்கான முனைப்புகளுக்கு தம...